Skip to main content

டாஸ்மாக் விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி மீது அவதூறு பரப்பிய கட்சி நிர்வாகிகள் கைது 

Published on 17/05/2020 | Edited on 17/05/2020
tasmac shop open issue



கரோனோ வைரஸ் பிரச்சனையில உலகமே ஊரடங்கை அமலபடுத்தி மக்களை தனிமைப்படுத்தி இருக்க அறிவுறுத்தினர். இநத நிலையில ஊரடங்கு முடியும் முன்பே தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்தது. இதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்ல உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றம சென்றதால், மதுக்கடைகளை திறக்க மீண்டும் அனுமதி கொடுத்தது.  இந்த நீதிமன்ற தீர்ப்பையும் நீதிபதிகளையும் அவதூறு பரப்பியவர்களை திருச்சியில போலிசார் கைது செய்துள்ளனர். 

 

 

திருச்சி தில்லைநகரில் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் சாதிக்பாட்சா. இவர் டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்பதற்கு அனுமதி அளித்ததன் காரணமாக உச்சநீதிமன்ற நீதிபதிகளை அவதூறாக சித்தரித்து முகநூல் பக்கத்தில் பதிவுகள் வெளியிட்டு இருந்தார்.  இதன் காரணமாக கே.கே.நகர் போலிசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சாதிக்பாட்ஷா அகில இந்திய முஸ்லீம் லீக் என்ற கட்சியைச் சேர்ந்தவர். கட்சியின் செய்தி தொடர்பாளர் முகமது யூசுப் இந்த பதிவுகளை பலருக்கு அனுப்பியதன் அடிப்படையில் அவரையும் போலிசார் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒரே நாளில் டாஸ்மாக் வசூல் ரூபாய் 252 கோடி! 

Published on 01/05/2022 | Edited on 01/05/2022

 

Tasmac collects Rs 252 crore in a single day!

 

தமிழகத்தில் நேற்று (30/04/2022) ஒருநாள் மட்டும் 252 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. 

 

மே 1- ஆம் தேதி உழைப்பாளர் தினத்தையொட்டி, இன்று (01/05/2022) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால், நேற்று (30/04/2022) கடைகளில் மதுபாட்டில்களை வாங்கக் கூட்டம் அலைமோதியது. இதனால் தமிழகத்தில் நேற்று (30/04/2022) ஒரே நாளில் 252 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. அதிகபட்சமாக மதுரையில் ரூபாய் 54.89 கோடிக்கும், சென்னையில் ரூபாய் 52.28 கோடிக்கும், திருச்சியில் ரூபாய் 49.78 கோடிக்கும், சேலத்தில் ரூபாய் 48.67 கோடிக்கும், கோவையில் ரூபாய் 46.72 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. 

 

Next Story

சேலத்தில் திருட்டு டாஸ்மாக் மதுக்கூடங்கள் மூடல்!

Published on 30/04/2022 | Edited on 30/04/2022

 

Tasmac liquor stores closed in Salem

 

சேலம் மாவட்டத்தில் அரசின் அனுமதியின்றி இயங்கிய 12 டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டன. 

 

சேலம் மாவட்டத்தில் 200- க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே அரசின் அனுமதியுடன் பார் எனப்படும் மதுக்கூட வசதி உள்ளது. பெரும்பாலான கடைகளுக்கு மதுக்கூட வசதி இல்லை. இந்நிலையில் சேலம் மாநகரில் சில இடங்களில் சட்ட விரோதமாக மதுக்கூடங்கள் நடத்தப்பட்டு வருவதாக டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. 

 

இதையடுத்து டாஸ்மாக் அதிகாரிகள், காவல்துறையினர் இணைந்து ஏப். 28- ஆம் தேதி திடீர் சோதனை நடத்தினர். அனுமதி பெறாத மதுக்கூடங்கள், அரசுக்கு குத்தகை தொகை செலுத்தாத மதுக்கூடங்கள் என மொத்தம் 12 மதுக்கூடங்கள் விதிகளுக்குப் புறம்பாக இயங்கி வருவது தெரிய வந்தது. 

 

இந்த 12 மதுக்கூடங்களும் உடனடியாக மூடி சீல் வைக்கப்பட்டன. மேலும், சட்ட விரோதமாக மதுக்கூடங்களை நடத்தியதாக அவற்றின் உரிமையாளர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.