Skip to main content

தீர்ப்புக்காகக் காத்திருக்கும் ஆண்டவர்கள்! - காந்திய மக்கள் இயக்கம் அறிக்கை!

Published on 27/02/2021 | Edited on 28/02/2021

 

tamilnadu assembly election gandhiya makkal iyakkam

 

காந்திய மக்கள் இயக்கத்தின் மாநிலச் செயல் தலைவர் டென்னிஸ் கோவில் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகம், புதுச்சேரி கேரளம், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்களின் தீர்ப்புக்காக ஆண்டவர்களும், ஆளத் துடிப்பவர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் முடிந்தாலும், தமிழகம், புதுச்சேரி, கேரளம், அசாம் மாநிலங்கள், தேர்தல் முடிவு தெரிவதற்காக மே இரண்டாம் தேதி வரை காக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

 

இதற்குக் காரணமாக மேற்கு வங்கத்தில் நடைபெறும் பல்வேறு கட்டத் தேர்தல்களில் இறுதித் தேர்தல், ஏப்ரல் 29ஆம் தேதி வரை நடைபெறுவது சுட்டிக் காட்டப்படுகிறது. மேற்கு வங்கத்திலும் பலகட்டத் தேர்தல்களைச் சுருக்கி, தேர்தல்களை விரைவாக நடத்தி முடித்து, வாக்கு எண்ணிக்கைக்கான தேதியை முன்கூட்டியே அறிவிக்கலாம். வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பதற்கான செலவினங்களையும் குறைக்கலாம்; விரும்பத்தகாத குற்றச் செயல்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகளைத் தவிர்க்கலாம். இந்தக் கருத்துகளை உள்வாங்கி, தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்" என்று காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.    

 

 


        

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலுக்கு முன் போடப்பட்ட 660 சாலை ஒப்பந்தங்கள் ரத்து!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

660 road contracts canceled before elections canceled

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்பு இறுதிச் செய்யப்பட்ட 660 சாலை ஒப்பந்தங்களை ரத்துச் செய்து சென்னை பெருநகர மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. 

 

கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் உள்ள பெருங்குடி, வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், அண்ணா நகர் உள்ளிட்ட மண்டலங்களில் சாலைகளை சீரமைக்க சுமார் 43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 660 ஒப்பந்தங்கள் போடப்பட்டன. சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப. பொறுப்பேற்றப் பின்னர், இந்த ஒப்பந்தங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைத்தார். 

 

தற்போது அந்த குழு அளித்துள்ள ஆய்வறிக்கையில், சாலை சீரமைப்பிற்கான ஒப்பந்தங்களில் உள்ள 3,200 சாலைகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும், தற்போதைய நிலையில் அதைச் சீரமைக்க வேண்டிய தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததால், ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

 

Next Story

வாக்குரிமையை உறுதி செய்ய வழக்கு தொடர்ந்த ஓட்டுநர்கள்.. வழக்கை முடித்துவைத்த உயர் நீதிமன்றம்..! 

Published on 13/07/2021 | Edited on 13/07/2021

 

Drivers suing to confirm suffrage .. High Court closes case ..!


அடுத்த தேர்தலின்போது தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் எவரும் தங்கள் வாக்குரிமையை இழக்கவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட வாடகை வாகன ஓட்டுநர்களால் தேர்தலில் வாக்களிக்க இயலவில்லை என்றும், அவர்களது வாக்குரிமையை உறுதிசெய்ய வேண்டும் என்றும் வாடகை வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனால், அவர்கள் வாக்களிப்பதை உறுதிசெய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டது.

 

மேலும், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த தேர்தல்களில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.