நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பல வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குகள் கூட விழவில்லை.

Advertisment

tamilisai soundararajan

ஒரு வாக்குச்சாவடிக்கு 4 முகவர்கள் இருக்கின்றனர். அவர்களின் வாக்குகள்கூடவா விழவில்லை, வாக்குப்பதிவில் மோசடி நடந்துள்ளது எனக் கூறினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது,

Advertisment

அமமுகவின் முகவர்கள் ஏமாற்றினார்களா என டிடிவி தினகரன் ஆராய வேண்டும். தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிப்பது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி சிலர் வெற்றி பெற்றுவிட்டனர். எனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவதாக வெளியான செய்தியும், தமிழக பாஜக மீது தேசிய தலைமை கோபமாக இருப்பதாக வெளியான தகவலும் பொய்யானது. தமிழகத்தில் உள்ள களத்தை பற்றியும், என்னைப் பற்றியும் தலைமைக்கு நன்றாகவே தெரியும்.