பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

tamilisai

Advertisment

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் "ஸ்டாலினும், ராகுலும் மாறி மாறி புகழ்ந்து பேசி வருகின்றனர். ராகுல் பிரதமர் ஆவார் என்று ஸ்டாலினும், ஸ்டாலின் முதல்வராவார் என்று ராகுலும் பேசி வருகின்றனர். ஸ்டாலின் முதல்வராக தமிழகத்தில் வாய்ப்பில்லை, ஆனால் அவர் வேறு எந்த மாநிலத்திலாவது போட்டியிடுகிறாரா என தெரியவில்லை" என கூறினார். மேலும் பிரதமர் மோடி சமூகவலைதளங்களிலும், சமூகத்திலும் பலமாக இருப்பதாகவும், இந்த தேர்தலில் கண்டிப்பாக தாமரை மலர்ந்தே தீரும் எனவும் தமிழகத்தில் இரட்டை இலை இந்த தேர்தலில் வலுப்பெறும் எனவும் கூறினார்.