திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மக்கள் விடுதலைக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் நிறுவனத் தலைவர் முருகவேல் ராஜன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் முருகவேல் ராஜன் கூறும்போது, “தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல்களில் திமுகவிற்கு மக்கள் விடுதலைக் கட்சி ஆதரவு அளிக்கும். இது தொடர்பான ஆதரவு கடிதத்தை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினிடம் அளிக்க இருக்கிறோம். ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிக்காக மக்கள் விடுதலைக் கட்சி பாடுபடும். மேலும், வரும் 20ஆம் தேதி ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திலும் மக்கள் விடுதலைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்பாளர்கள்” என்று கூறினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட மக்கள் விடுதலைக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.