Mk Stalin

உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை திறந்து சட்டப்பேரவையின் மாண்பை குலைக்கக் கூடாது என எதிர்க் கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisment

மக்களாட்சி தத்துவத்தின் மாண்பாக திகழும் சட்டப்பேரைவையில் ஜெயலலிதா படத்தை பேரவைத் தலைவர் திறந்து வைப்பதற்கு திமுக சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் திறப்பது கருப்பு நடவடிக்கை. ஊழல் குற்றவாளியின் படத்தை திறக்க சபாநாயகருக்கு எவ்வித அதிகாரமும், உரிமையும் இல்லை. அவைக்கு ஒவ்வாத சொற்களை நீக்கும் சபாநாயகர் ஊழல் குற்றவாளியின் படத்தை திறப்பது மிகப்பெரும் இழுக்கு.

ஜெயலலிதாவின் படத்தை திறந்து சட்டப்பேரவையின் மாண்பை குலைக்கக் கூடாது. ஜெயலலிதா படத்தை திறக்க கூடாது என்ற வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில், அவசர, அவசரமாக படத்திறப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர் என அவர் கூறியுள்ளார்.