Skip to main content

ரஜினி அரசியல் பற்றி கமலிடம் சேரன் கேட்ட கேள்வி! கமல் பதிலை வெளியிடாத பிக் பாஸ் டீம்!

Published on 06/08/2019 | Edited on 06/08/2019

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசனைப் போலவே சீசன் 3யும் மக்கள் மத்தியில் பிரபலமாக போய்க்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன் மற்றும் ரேஷ்மா இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் நேற்று நிகழ்ச்சி முடிவின் போது நடிகர் சரவணன் திடீரென்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் மக்கள் நீதி மய்ய கட்சியின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் தனது முகநூல் பக்கத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த நிகழ்வு ஒன்றை பதிவிட்டுள்ளார். 

 

big boss



அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது போட்டியாளர்களுக்கு பிரபல நடிகர்கள் போல் நடிக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில் அந்த பிரபல நடிகர்கள் கேள்வி கேட்பது போல் அந்த வேடம் போட்டவர்கள் கமலிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று கூறப்பட்டது. அப்போது நடிகரும், இயக்குனருமான சேரன் அந்த டாஸ்கின் போது ரஜினி வேடம் போட்டிருந்தார். ரஜினி கமலை பார்த்து கேட்பது போல், வணக்கம் கமல் , நல்லா இருக்கீங்களா? எனக்கு சில அரசியல் கேள்விகள் உங்ககிட்ட இருக்கு. நானும் நீங்களும் ஒரு 40 வரு‌ஷம் நடிகர்களாக பயணம் பண்ணிட்டோம். நாம நடிகர்களாக இருந்தபோது மக்கள் நம்ம கிட்ட என்ன கேட்டார்களோ அத முடிந்த வரைக்கும் சிறப்பா கொடுத்துருக்கோம்.


இப்போது நானும் அரசியலில் குதிக்க நினைத்துக்கொண்டு இருக்கிறேன், நீங்க குதிச்சிட்டீங்க... நடிகர்களாக இருந்து அவர்களை திருப்திபடுத்திய நாம், அரசியல் தலைவர்களாக மாறி, அந்த மக்களின் எதிர்பார்ப்புகள் திருப்தி அடைகிற மாதிரி வேலை செய்ய முடியுமா ?' எனக் கேட்டார். அதற்கு 'அவர்கள் எதிர் பார்ப்பதில் ஒன்று, இப்படி நானும் நீங்களும் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்பது தான். முடியுமான்னு கேட்டீங்கன்னா, முனைந்தால் முடியும். அதற்கு, நான் என்பது நாமானால் கண்டிப்பாக முடியும். இது இந்த ரஜினி(சேரன்) வந்தாலும் சொல்லுவேன், அந்த ரஜினி வந்தாலும் சொல்லுவேன்' என்று கமல் பதிலளித்தார்.  ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீன்களை போடவில்லை ஏன் என்று தெரியவில்லை என்று அதன் ரசிகர்கள் வருத்தத்தில் இருப்பதாக சொல்கின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

“தனி ஒருவனாக குரல் கொடுத்தேன்” - விஷால் பகிர்வு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
vishal political speech latest in rathnam promotion event

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

ad

அந்த வகையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்து தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் . 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவு பணம் என கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார். 

Next Story

பா.ஜ.க வேட்பாளரின் நாடகம் அம்பலம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP candidate's play exposed in kerala

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவடையவுள்ளது.

அந்த வகையில், கேரளா மாநிலம், கொல்லம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அந்த தொகுதி முழுவதும் கிருஷ்ணகுமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அதன்படி, கொல்லம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குந்த்ரா பகுதியில் உள்ள சந்தையில் இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள மக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் கூர்மையான ஆயுதம் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

BJP candidate's play exposed in kerala

இதனையடுத்து, காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் தையல் போட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, எதிர்க்கட்சியினர் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமார் புகார் கூறினார். இது தொடர்பாக கிருஷ்ணகுமார் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “கேரளாவின் கொல்லம் குந்த்ராவில் எனது மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தின் போது எனக்கு எதிர்க்கட்சிகளின் தாக்குதலால் கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கிறது. நன்றி” எனத் குறிப்பிட்டு கண்ணில் பிளாஸ்திரியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டார்.

இது தொடர்பாக, குந்திரா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், கிருஷ்ணகுமார் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க தொண்டர் சனல் என்பவரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தவறுதலாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.