டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தமிழகம் முழுவதும் திமுகவினர் கருப்புக் கொடிகளை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

அதன் ஒரு பகுதியாக கரூர் ஆரம்பச் தபால் நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி சட்டமன்ற உறுப்பினரும், கரூர் மத்திய நகர திமுக பொறுப்பாளர் கனகராஜ், விவசாய அணி செயலாளர் சின்னசாமி கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி விவசாயிகளுக்கு ஆதரவாக தங்களுடைய மத்திய அரசுக்கு எதிரான கண்டனத்தையும் பதிவு செய்தனர்.

Advertisment