Skip to main content

வாட்ஸ் ஆப், யூ டியூப் பார்க்கிறது இல்லையா? நல்லா கை தட்டுங்கள்... -செல்லூர் ராஜ் பேச்சு 

Published on 04/10/2019 | Edited on 04/10/2019 

தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவு துறை சார்பில் பயனாளிகளுக்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மற்றும்  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

 

Sellur K. Rajuஇந்த விழாவில் கூட்டுறவுத்துறை துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, ஏன் எல்லோரும் அமைதியா இருக்கீங்க?. தேனி வந்தா சுறு சுறுப்பா இருப்பீங்கன்னு பார்த்தா, இப்படி இருக்கீங்களே? கை தட்டினா இதயத்துக்கு நன்கு ரத்த ஓட்டம் இருக்கும். வாட்ஸ் ஆப், யூ டியூப் பார்க்கிறது இல்லையா? கை தட்டுனா உடம்புக்கு ரொம்ப நல்லது. நல்லா கை தட்டுங்கள் என்று அவர் பேச ஆரம்பித்ததும். கூட்டத்தில் கலகலப்பு தொடங்கியது. 
 

தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு, ஓபிஎஸ்க்கு பலரும் விளக்கம் சொல்வார்கள். நான் சொல்கிறேன். ஓ ஒற்றுமை, பி பாசம், எஸ் சேவை எனக் கூறினார். மேலும், துணை முதல்வரான "ஒபிஎஸ் வேட்டி கட்டிய அம்மா" என்று புகழ்ந்ததுடன் மட்டும்மல்லாமல்  இரண்டு கவிதைகளை கூறி  ஓபிஎஸ்சை  வார்த்தைக்கு வார்த்தை அண்ணன் அண்ணன் என புகழ்ந்து பேச்சிலேயே நெருக்கம் காட்டியவர், இரண்டு வருடங்களுக்கு மேல் இத்துறையில் யாரும் இருந்ததில்லை இன்றோடு எனக்கு இத்துறையில் ஒன்பது வருடங்கள் ஆகிறது. இந்தியாவுக்கே முன்னோடியாக அதிக விருதுகளை பெற்றுள்ள துறையாக உள்ளது. மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். வாங்கிய கடனை நீங்கள் கட்டி விடுவீர்கள். பார்க்கத்தான் கரடுமுரடாக இருப்பீர்கள் தேனி மக்கள் பாசக்காரர்கள் என்றார்.
 

இந்த விழாவில் ஓபிஎஸ் மகனான எம்பி ரவீந்திரநாத் குமார், மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், கம்பம் எம்எல்ஏ ஜக்கையன், மாவட்ட செயலாளர் சையதுகான், மாவட்ட துணை செயலாளர் முறுக்கோடை ராமர் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்களுடன் அதிகாரிகளும் பலரும் கலந்து கொண்டனர்.

 


  

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாதயாத்திரை விபத்தில் பலியான 5 பேர்; நிவாரணத் தொகையை வழங்க அமைச்சர்கள்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
5 lose their live in padayatra accident; Ministers to provide relief amount

சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற போது விபத்தில் பலியான 5 பக்தர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்லாக்கோட்டை ஊராட்சி கண்ணுகுடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் சமயபுரம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை தஞ்சை மாவட்டம் வளப்பக்குடி கிராமம் அருகே நடந்து சென்ற பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் கண்ணுகுடிப்பட்டி என்கிற ஒரே கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி (60), ராணி (37), மோகனாம்பாள் (27), மீனா (26), தனலட்சுமி (36) ஆகிய 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இவர்களுடன் நடந்து சென்ற சங்கீதா படுகாயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்புச் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா ரூ.2 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை மற்றும் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா ஆகியோர் கண்ணுக்குடிப்பட்டி கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறி முதலமைச்சரின் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினர். நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story

காமராஜர் பிறந்த மாவட்டத்திலும் காலை உணவுத் திட்ட தொடக்க விழா! அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024

 

உலகிற்கே முன்னோடி திட்டமாக அமைந்துள்ளதாகக் கூறப்படும்  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை,  பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில், திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்திலுள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தினை விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், கல்லூரணி எஸ்.பி.கே. தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு துவங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்தினார்.

பெருந்தலைவர் காமராஜரின் 122வது பிறந்ததினத்தை முன்னிட்டு, விருதுநகர் மதுரை சாலையிலுள்ள காமராஜர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில், அன்னாரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும், தக்கம் தென்னரசுவும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,   விருதுநகர் எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் நகர்மன்றத் தலைவர் மாதவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ராஜபாளையம் தொகுதியிலும் தளவாய்புரம் ஊராட்சி பு.மூ.மா.அம்மையப்ப நாடார் ஆரம்பப் பள்ளி மற்றும் கிருஷ்ணாபுரம் பெருந்தலைவர் காமராஜர் இந்து நாடார் தொடக்கப்பள்ளி போன்ற பள்ளிகளில், ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் தொடங்கிவைத்து, குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவைச் சாப்பிட்டார். ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாகர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்திலும் அவருடைய பிறந்தநாள் விழா மற்றும் காலை உணவுத்திட்டத்தின் தொடக்க விழாவை சிறப்புடன் நடத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ. போன்ற மக்கள் பிரதிநிதிகள் கர்மவீரருக்கு புகழ் சேர்த்துள்ளனர். 

The website encountered an unexpected error. Please try again later.