Skip to main content

பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பாவிற்கு விரைவில் முக்கிய பதவி? பாஜகவின் கோபத்தில் இருந்து விலகிய அதிமுக!

Published on 06/02/2020 | Edited on 06/02/2020

டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சசிகலா புஷ்பா எம்.பி.  இணைந்தார். அப்போது பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் சசிகலா புஷ்பாவின் வருகை தமிழக பாஜகவை வலுப்படுத்தும் என்றார். அதிமுகவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.   
 

bjp



மேலும் ஜெ. ஆட்சிக்காலத்திலேயே பல பிரச்சனைகளை ஏற்படுத்திய சசிகலா புஷ்பா, பா.ஜ.க.வின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அவர் பதவிக்காலம் வரும் ஏப்ரலில் முடியும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் தான் 2-ந் தேதி அவர் பா.ஜ.க.வில் சேர்ந்தார் என்கின்றனர். இது கட்சித் தாவல் சட்டப்படி நடவடிக்கைக்கு உரியது என்ற போதும், சபாநாயகரிடம் அவர் மீது புகார் கொடுத்து, பா.ஜ.க.வின் கோபத்தைச் சம்பாதித்துக் கொள்ள விரும்பாத அ.தி.மு.க. தலைமை, புஷ்பா விவகாரத்தைக் கண்டும் காணாதது போல் முகம் திருப்பிக்கொண்டிருக்கிறது. தமிழக பா.ஜ.க. தலைவர் நியமனத்தின் போது, முக்கியமான பதவி தரப்படும் என்று பா.ஜ.க. தரப்பு சசிகலா புஷ்பாவுக்கு உறுதிமொழி கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

கட்டுக்கட்டாக சிக்கிய பணம்; நயினார் நாகேந்திரன் உறவினர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Video release of Nainar Nagendran in connection with Rs 4 crore liquor stuck in train

நெல்லை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், அதிமுக சார்பில் ஜான்சி ராணி, பாஜக சார்பில் நெல்லை எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் தரப்படுவதைத் தடுக்க, தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. மேலும், பல்வேறு இடங்களில் நடைபெற்ற வாகன தணிக்கை மற்றும் சோதனைகளில், பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த வகையில், கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட 4 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படை கைப்பற்றியது. அதே வேளையில், அந்த பணத்திற்கும் நயினார் நாகேந்திரனுக்கும் தொடர்பு உள்ளது என்றும், அந்த பணத்தை கொண்டு சென்றவர்கள் பாஜகவினர் என்றும் தகவல் வெளியானது. ஆனால், நயினார் நாகேந்திரன், 'எனக்கும் அதற்கு சம்பந்தமில்லை' என கூறி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். இத்தகைய சூழலில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தாம்பரம் போலீசார், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதிலும், எஃப் ஐ ஆர்-ல் சொல்லப்பட்ட பல முக்கிய தகவல்கள் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதில், சென்னை சிட்லபாக்கத்தைச் சேர்ந்த உதவி வேளாண்மை அலுவலர் செந்தில் பாலாமணி என்பவர் தேர்தல் பறக்கும் படையில் உள்ளார். அவரது டீம்மில் காவலர்கள் பிரபாகரன், குணசீலன், வீடியோ கிராபர் மோகன்ராஜ், டிரைவர் டில்லிபாபு ஆகியோர் உள்ளனர். சம்பவத்தன்று செந்தில் பாலாமணி தேர்தல் பறக்கும் படை டீம் தாம்பரம் செக்போஸ்ட் அருகே பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர், செந்தில் பாலாமணியை போனில் தொடர்பு கொண்டு சென்னையிலிருந்து நெல்லைக்குச் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸில் ஏ கோச் படுக்கை எண்கள் 26,27,28 ஆகியவற்றில் பயணம் செய்பவர்கள் பணம் கொண்டுச் செல்வதாக தகவல் அளித்துள்ளார். தகவலின் படி, செந்தில் டீம்  தாம்பரம் ரயில் நிலையத்துக்கு சென்று பிளாட்பாரம் 8-ல் காத்திருந்துள்ளனர்.

தகவலின் படி ரயிலில் பயணம் செய்த சதீஷ், பெருமாள், நவீன் என்ற மூவரை அதிகாரிகள் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அதில் அதிக அளவு பணம் இருந்தது தெரிய வந்தது. கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால்  தேர்தல் பறக்கும் படை கையும் களவுமாக அவர்களை பிடித்து தாம்பரம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று சோதனை செய்துள்ளனர். அதில், 3,98,91,500  ரூபாய் இருந்துள்ளது. இது குறித்து சிக்கிய சதீஷ் என்பவரிடம் விசாரித்தபோது, அவர் புரசைவாக்கம் பகுதியில் உள்ள திருநெல்வேலி தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும், ஜெய்சங்கர் என்பவர் 500 ரூபாய் கட்டுகளுடன் கூடிய நான்கு பைகளை, திருநெல்வேலியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக, தன்னிடம் கொடுத்து அனுப்பினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பெருமாள் என்பவரிடம் விசாரணை செய்ததில் திருவல்லிக்கேணியில் உள்ள ஹோட்டலிருந்து ஆசைத்தம்பி என்பவர் கொடுத்தனுப்பிய பணத்துடன் ரயிலில் வந்ததும் தெரியவந்தது.

மேலும், இந்தப் பணம் அனைத்தையும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி நாடாளுமன்ற வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக தன்னிடம் கொடுத்ததாக சதீஷ் என்பவர் கூறியுள்ளார். மேலும் அவரிடமிருந்து பிஜேபியில் உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ-வின் அடையாள அட்டையும் தேர்தல் பறக்கும் படையின கைப்பற்றியுள்ளனர்.

இதனிடையே, சிக்கியவர் கொடுத்த தகவலின் படி திருநெல்வேலி நாடாளுமன்ற பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு 22ஆம் தேதியில் விசாரணைக்கு ஆஜராகும்படி கூறியுள்ளனர்.  இதுதொடர்பாக திருநெல்வேலி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பிடிபட்டது தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத் துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மனு மீது அமலாக்கத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததால் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக தேர்தல் ஆணையரிடம் மனு அளித்தும், அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து, அந்த மனுவை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு.. இன்றைய தினம் அவசர வழக்காக விசாரிப்பதாகக் கூறியுள்ளது.

Video release of Nainar Nagendran in connection with Rs 4 crore liquor stuck in train

இத்தகைய சூழலில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் குறித்து வெளியான வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், நயினார் நாகேந்திரனின் உறவினர் என சொல்லப்படும் முருகன் என்பவர், தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது தான் என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, நயினார் நாகேந்திரனின் பிஏ மணிகண்டன் கேட்டுக்கொண்டதால்  சென்னையிலிருந்து நெல்லைக்கு பணம் எடுத்து செல்ல புளூ டைமண்ட் ஓட்டலுக்கு  பெருமாள் என்பவரை அனுப்பியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இவர் குறிப்பிட்டுள்ள பெருமாள் என்பவர் தாம்பரம் ரயில் நிலையத்தில் கைதான மூன்று பேரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம், பெருமாள் அவரது வாக்குமூலத்தில் தனது முதலாளி முருகன் அனுப்பியதால் ப்ளூ டைமண்ட் ஹோட்டலுக்கு சென்று நெல்லைக்கு புறப்பட்டதாக கூறியிருந்தார் என்பது தெரியவந்துள்ளது.