![admk](http://image.nakkheeran.in/cdn/farfuture/M8FFhvUEjHfzgQJQxWrT8PtF6iIHvAKSQL92YZYiZM0/1590048193/sites/default/files/inline-images/159_1.jpg)
விரைவில் ரிலீசாகி வெளியே வரப்போகும் சசிகலாவை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்ள எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் தயாராக இருப்பதாகக் கூறுகின்றனர். இந்த நிலையில் ஓ.பி.எஸ். மட்டும் தினகரனிடம் தனியே பேசிக் கொண்டு இருக்கிறார் என்று ஒரு தகவல் எடப்பாடி காதுக்கு வர, உடனே ஓ.பி.எஸ்.சிடமே பேச்சுவார்த்தை நடத்திய எடப்பாடி, நாம் சசிகலாவை நம்புகிறோம். ஆனால் அவர்கள் நம்மை எந்த அளவுக்கு நம்புவார்கள் என்று தெரியவில்லை. அதனால் நாம் இரண்டு பேரும் எந்த நிலையிலும் ஒன்றாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் வந்தபிறகும் நமக்கான அதிகாரம் நிலைக்கும் என்று கூற, ஓ.பி.எஸ்சும். ஏற்றுக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
மேலும் சசிகலாவின் ரிலீசுக்கு முன்பாகவே தங்கள் விசுவாசிகளை மா.செ.க்கள் ஆக்குவதன் மூலம் தங்கள் பலத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதன்படி ஒரு மாவட்டத்தில் மாநகர் மா.செ.வாக எடப்பாடி விசுவாசி இருந்தால், அங்கே புறநகர் மா.செ.வாக ஓ.பி.எஸ். விசுவாசி இருப்பார். மாநகரில் ஓ.பி.எஸ். விசுவாசி மா.செ. என்றால் புறநகரில் எடப்பாடி விசுவாசி மா.செ.வாம். இப்படி ஒரு ரகசிய ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள் என்று சொல்கின்றனர்.