இன்று (18.01.2020) சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ராதிகா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில் கட்சியின் புதிய கொடி மற்றும் வேஷ்டியை சரத்குமார் அறிமுகபடுத்தினார். கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு அலுவலகத்தின் வெளியே இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.