Skip to main content

சுரேந்தினுக்கு ஒரு நீதி.. எஸ்.வி.சேகருக்கு ஒரு நீதியா..? -சு.ஆ.பொன்னுசாமி கேள்வி!

Published on 18/07/2020 | Edited on 18/07/2020
PONNUSAMY

 

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் & மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடவுள் மறுப்பு, பெரியாரிசம் என்ற பெயரில் இந்து மதத்தையும், இந்து மதக் கடவுளர்களையும், பக்தி மார்க்கங்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வருவது ஏற்புடையதல்ல. அதிலும் மூடநம்பிக்கை ஒழிப்பு என்கிற பெயரில் குறிப்பிட்ட மதத்தை மட்டும் இலக்கு வைத்துச் செயல்படுவது மதச்சார்பின்மை கொண்ட நமது தேசத்திற்கு நல்லதல்ல.

 

அந்தவகையில் தமிழ்க்கடவுள் எம்பெருமான் முருகப்பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை விமர்சனம் என்கிற பெயரில் தரம் தாழ்ந்து இழிவுபடுத்தி "கறுப்பர் கூட்டம்" வலையொளியில் பேசிய சுரேந்திரன் மீது புகார் அளித்த ஓரிரு நாட்களிலேயே அந்த வலையொளி நிர்வாகி செந்தில்வாசன் கைது செய்யப்பட்டு, அதன் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கந்த சஷ்டி கவசம் குறித்து இழிவுபடுத்தி பேசிய சுரேந்திரன் புதுவை அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் சரணடைய அவரை கைது செய்து தமிழகம் அழைத்து வந்திருக்கும் தமிழக காவல்துறைக்கு (!!!!) பாராட்டுகள்.

 

மேலும் எம்பெருமான் முருகனை இழிவுபடுத்திய நபர்களைக் கைது செய்யாவிட்டால் இஸ்லாமிய பெருமகனார் முகமது நபிகள் குறித்து கார்ட்டூன் போடுவேன் என மிரட்டிய நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

 

இந்நிலையில் தமிழ்க்கடவுளை, இழிவுபடுத்தியதைக் காரணமாக வைத்து பெரியாரின் சிலைக்கு சாயம் பூசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஏனெனில் "அடிக்கு அடி", "உதைக்கு உதை" என ஒவ்வொரு மத அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் செயல்படுமானால் அது தேசநலனுக்கு விரோதமாகவே அமையும். எனவே இது போன்ற மக்கள் விரோத சக்திகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.

 

நிற்க...

 

தமிழ்க்கடவுளான எம்பெருமான் முருகனை இழிவுபடுத்திய நபர்களைக் கைது செய்ய வேண்டும் என இந்துத்துவ அமைப்புகள் காவல் ஆணையாளரிடம் புகார் அளித்த ஓரிரு நாட்களிலேயே சம்பந்தப்பட்ட நபர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரையும், அவர் தொடர்புடைய நபரையும் ஓரிரு நாட்களில் கைது செய்த தமிழக காவல்துறையின் வேகம் கண்டு வியக்கிறேன்.

 

ஏனெனில் கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகர் சமூக வலைத்தளத்தில் ஊடகத்துறை மீதும், பெண் ஊடகவியலாளர்கள் மீதும் அவதூறுகளை அள்ளி வீசி களங்கப்படுத்தும் நோக்கில் தரம் தாழ்ந்து பதிவிட்டிருந்தார். அவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்ய வேண்டும் எனச் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் 20.04.2018அன்று முதல் புகார் அளிக்கப்பட்டதோடு பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்களும், ஊடகவியலாளர்களும் தொடர்ந்து அவர் மீது புகார் அளித்தனர்.

 

ஆனால் எஸ்.வி.சேகரை தேடுகிறோம், தேடுகிறோம், தேடிக் கொண்டே இருக்கிறோம்  என சுமார் 60நாட்களைக் கடந்து தமிழக காவல்துறை தேடிக் கொண்டே இருந்தது. அவரோ சுதந்திரமாகவே உலா வந்தார். அதன் பிறகு அவரை கைது செய்யாமல் இருக்க 60நாட்களைக் கடந்து ஜாமீன் கிடைத்தது 

 

ஆனால் தற்போது தமிழ்க்கடவுளான எம்பெருமான் முருகன் விசயத்தில் இந்துத்துவ அமைப்புகள் புகார் அளித்ததும் புலிப்பாய்ச்சல் பாய்ந்த தமிழக காவல்துறை அன்று எஸ்.வி.சேகரை  60 நாட்கள் கடந்தும் கைது செய்யாமல் இருந்தது ஏன்..? 

 

உயிரோடில்லா கடவுளர்களுக்கும், ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கும் கொடுக்கும் மரியாதை இரத்தமும், சதையுமாக நம்மோடு உலா வந்து உயிரோடிருக்கும் நம் சகோதரிகளான பெண்களுக்கும், சாமான்ய மக்களுக்கும் இல்லையா..? இது தான் ஜனநாயகமா..? காவல்துறை தான் விளக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி சாலையில் பால் ஊற்றிய உற்பத்தியாளர்கள்

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

milk producers request to government raise purchase price milk 

 

புதுச்சேரியில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

புதுச்சேரி அரசு பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் விலை ஏற்கனவே 34 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 3 ரூபாயை அதிகரித்து 37 ரூபாய்க்கு கொள்முதல் செய்து வருகிறது. ஆனால், இதுவரை உயர்த்தப்பட்ட விலையையும் கொடுப்பதில்லை; மாடுகளுக்கு தேவையான தீவனங்கள் விலை உயர்ந்து விட்டதால் கொள்முதல் விலையை 45 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்; நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் ஊர்வலமாகச் சென்று சட்டப்பேரவை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

அப்போது அவர்கள் தங்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பால் உற்பத்தியாளர்கள் திடீரென தாங்கள் கொண்டு வந்த பாலை சாலையில் ஊற்றி தங்களின் எதிர்ப்பை தெரிவித்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அரசு உடனடியாக பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை என்றால் அடுத்தகட்டமாக முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தனர். 

 

 

Next Story

பால் கொள்முதலில் ரூ.2 கோடி ஏமாற்றம்! மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்த நிர்வாகிகள்...

Published on 24/11/2020 | Edited on 24/11/2020

 

Rs 2 crore disappointment after buying milk ...! Manufacturers' Association executives who have complaint with the District Collector ...

 

 

தேனி மாவட்டத்தில் உள்ள  ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, சின்னமனூர், கம்பம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள், விவசாயிகளிடம் இருந்து பாலை கொள்முதல் செய்து, உத்தமபாளையம் அருகே உள்ள புலிக்குத்தி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த பாண்டியராஜ் என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீ மீனாட்சி அக்ரோ புட்ஸ் டிரேடிங் என்ற நிறுவனத்துக்கு கொடுத்துள்ளனர். இப்படி வாங்கிய பாலுக்கு பாண்டியராஜ், பணம் கொடுக்காமல் ரூ.2 கோடியுடன் தலைமறைவாகிவிட்டார் என்று மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ்விடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.

 

இது தொடர்பாக குமணன் தொழு கிராமத்தைச் சேர்ந்த பாண்டி கூறும்போது, “கரோனா காலத்தில் பால் அதிக அளவில் தேக்கமடைந்தது. அப்போது எங்களை அணுகிய புலிக்குத்தியைச் சேர்ந்த பாண்டியராஜ் என்பவர், பாலை கொள்முதல் செய்வதாகவும், அதற்கு உரிய பணம் கொடுப்பதாகவும் கூறினார். நாங்களும், அவருடைய நிறுவனத்தை நேரில் சென்று பார்த்துவிட்டு, பாலை கொடுக்க ஆரம்பித்தோம். சில நாட்களில் பணம் தருவதாகக் கூறியவர் மாதக்கணக்கில் பணத்தைக் கொடுக்காமல் இருந்தார். கேட்டதற்கு, தனது நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்த கேரள வியாபாரிகள் இன்னும் பணம் கொடுக்கவில்லை என கூறினார். நாங்களும் ஆறு மாதம் வரை பொறுத்துப் பார்த்தோம். ஒரு நாள் நிறுவனத்துக்குப் பூட்டு போட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார். 

 

இது தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தோம். ஆனால், இன்றுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஒவ்வொரு பால் உற்பத்தியாளர் சங்கத்துக்கும் லட்சக் கணக்கில் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. மொத்தம் 30 பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மட்டும் ரூ.2 கோடி பணம் தர வேண்டும். தலைமறைவாக உள்ள பாண்டியராஜைப் பிடித்து அவரிடம் இருந்து பணத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும்” என்றார். இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.