பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பு வரை பாமகவின் நிலைப்பாடு அதிமுக கட்சி மற்றும் ஆட்சிக்கு எதிரான நிலைப்பாடாக இருந்தது . தற்போது அதிமுகவும் பாமகவும் கூட்டணியில் உள்ளதால் அந்த இரு கட்சிக்குள் கோஷ்டி பூசல் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. ஏற்கனவே கடலூர் தொகுதியில் அதிமுக கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசலால் அந்த தொகுதியில் பெருவாரியான தொண்டர்கள் வேறு கட்சிக்கு மாறி வரும் நிலையில் பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நேற்றைய தினம் ஒரு ஓட்டலில் பாமகவினரை அழைத்து வெகு நேரமாக ஆலோசனை நடத்தியுள்ளார் .

Advertisment

ramadoss

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதன் பின்னணி என்ன என்று விசாரித்த போது அதிமுகவில் நிலவி வரும் அதிருப்தி காரணமாக அக்கட்சியிலிருந்து முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் ஆதரவாளர்களுடன் விலகினார். மேலும், அதிமுக அதிருப்தியாளர்கள் ஏராளமானோர் நேற்று கடலூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட டிடிவி தினகரன் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர் இதனால் கடலூர் தொகுதியில் அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு மிகக் குறைவாக காணப்படுகிறது. இதனை சரி செய்வதற்காக கட்சி நிர்வாகிகளையும் , தொண்டர்களையும் கூப்பிட்டு ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது .