மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி, பூரண மது விலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் மேலும், ''மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் காந்தியடிகளின் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அக்டோபர் 2 முதல் 20 ஆம் தேதி வரை மது ஒழிப்பு பரப்புரையை, 18 நாட்கள் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுக்க நடத்தி உள்ளோம்.

Advertisment

THAMIMUN ANSARI

தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மஜக தொண்டர்கள் "மதுவை எதிர்ப்போம்- மனிதம் காப்போம் " என்ற வாசகம் அடங்கிய பனியன்களோடு, 12 வகையான பரப்புரை யுக்திகளோடு, 1 கோடிக்கும் அதிகமான மக்களிடம் இப்பரப்புரையை சேர்த்திருக்கிறார்கள்.

கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் மதுவுக்கு எதிராக நடைப்பெற்ற மிகப் பெரிய விழிப்புணர்வு சேவை இதுதான் என்று பலரும் வரவேற்றுள்ளனர்.

Advertisment

சென்ற இடங்களில் எல்லாம், "எப்போது மதுக்கடைகளை பூட்டு வாங்க"? என்று தாய்மார்கள் ஒரே குரலில் கேள்வி கேட்டதை அறியும் போது பூரண மது விலக்கு மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது என்பதை உணர முடிந்தது.

எனவே தமிழக அரசு, ஜெயலலிதா வாக்குறுதியை நிறைவு செய்யும் வகையில் தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

கடந்த 18 நாட்களாக மது எதிர்ப்பு பரப்புரையில் அயராது உழைத்த மஜகவின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும் , தலைமையகத்தின் சார்பில் எமது. பாராட்டுகளை உரித்தாக்கி கொள்கிறோம்.

இதற்கு ஒத்துழைப்பு தந்த சமூக ஆர்வலர்கள், ஊடகவியலர்கள், காவல்துறையினர் உட்பட அனைவருக்கும் எமது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றார்.