Skip to main content

படிக்கட்டில் ஏறும் போது தடுக்கி கீழே விழுந்தார் மோடி... அலெர்ட்டான பாதுகாப்பு வீரர்கள்... வைரலாகும் வீடியோ! 

Published on 14/12/2019 | Edited on 14/12/2019

உத்தரப்பிரதேச மாநிலத்தில்  நமாமி கங்கா திட்ட கூட்டத்திற்காக சென்றிருந்த பிரதமர் மோடி படியேறும் போது தடுமாறி கீழே விழ முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சிலின் முதல் கூட்டம் இன்று நடந்தது. கான்பூர் சந்திரசேகர் ஆசாத் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.
 

modi

 


மேலும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், பீகார் துணை முதலமைச்சர் சுஷில் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், கங்கை நதியை தூய்மைபடுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட நமாமி கங்கா திட்டம் குறித்து ஆலோசித்தனர்.


அதன் பின்னர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் கங்கை நதியில் படகில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டனர். படகுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பி வரும் போது, படியில் பிரதமர் மோடி ஏறும் போது கால் தடுக்கி கீழே விழ முயன்றார். அப்போது அவருடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் பிரதமர் மோடி கீழே விழாமல் தாங்கி பிடித்தனர். இந்த சம்பவம் ஏற்பட்ட போது சிறிது விநாடிகள் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்பு பிரதமர் மோடி கார் மூலம் அங்கு இருந்து சென்றார். தற்போது சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடி தடுக்கி கீழே விழுந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. 
 

 

சார்ந்த செய்திகள்