புதுச்சேரியை அடுத்த பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர்காக்கும் மருந்துகள் இல்லை, அவசர உதவிக்கு ஆம்புலன்சை இயக்க டீசல் கூட போட இயலாத நிலையில் பாகூர் தொகுதி மக்களின் உயிருடன் விளையாடும் புதுச்சேரி அரசை கண்டித்து ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் கடந்த 09-ஆம் தேதி பேரணியாக சென்று பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
அப்போது செய்தியாளர்களை சந்தித்த தனவேலு, முதலமைச்சர் நாராயணசாமி பற்றியும் அமைச்சர்கள் பற்றியும் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினார். ஆளும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே முதலமைச்சர் நாராயணசாமிக்கு எதிராக பேசியது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடியிடமும் தனவேலு புகார் மனு அளித்தார்.
அதையடுத்து அவரை காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து தற்காலிகமாக நீக்கி புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அறிவித்தது. ஆனாலும் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக எம்.எல்.ஏ தனவேலு ஆயிரக்கணக்கான தொகுதி மக்களுடன் நீதி கேட்டு கண்டன பேரணி நடத்தி, ஆளுநரிடம் மீண்டும் புகார் அளித்தார்.
அதையடுத்து அரசு கொறடா அனந்தராமன் 'தனவேலுவை சட்டமன்ற உறுப்பினரிலிருந்து தகுதி நீக்கம்' செய்யுமாறு சட்டசபை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் மனு அளித்தார். உடன் காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });