Skip to main content

தி.மு.க.வுக்கு பா.ம.க. ஆதரவு... திடீர் திருப்பத்தால் அ.தி.மு.க. அதிர்ச்சி

Published on 17/12/2019 | Edited on 17/12/2019

 

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுக்கு இத்தனை இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதையடுத்து அதிமுக தலைமையோ, அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் கலந்து பேசி வெற்றி வாய்ப்புள்ள இடங்களை பெற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியது. இதையடுத்து பாஜக, பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் அந்தந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களிடம் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களை ஒதுக்கக்கோரினர். இந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு மாவட்டங்களில் அந்த கூட்டணியில் விரிசல் வந்துள்ளது.

 

pmk-dmk


 

தஞ்சை மாவட்டம் கிழக்கு ஒன்றியம் உள்ளூர் ஊராட்சி 12வது வார்டில் போட்டியிட பாமக விரும்பியது. தங்களுக்கு அந்த சீட்டை ஒதுக்க வேண்டுமென அதிமுகவிடம் பாமக கேட்டது. ஆனால் அதிமுகவோ, அந்த வார்டை பாமகவுக்கு ஒதுக்க வாய்ப்பில்லை என்று தெளிவாக கூறிவிட்டது.


 

இதையடுத்து அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது, தனித்து போட்டியிட்டாலும் கட்சி மேலிடத்திற்கு பதில் சொல்ல வேண்டும், அந்த சிக்கலை தவிர்க்க திமுக சார்பில் போட்டியிடும் நபரை வெற்றி பெற வைக்கலாம் என்று முடிவு செய்தனர். 


 

பாமகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி துணை தலைவர் மாது, மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும், ஒன்றிய துணைத்தலைவருமான அழகர்,  அமைப்புசாரா தொழிற்சங்க துணைத்தலைவர் சரவணன் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கும்பகோணம் திமுக எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் மற்றும் ஒன்றிய செயலாளர் கணேசன் ஆகியோரை நேரில் சந்தித்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர். திமுக சார்பில் 12வது வார்டில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்வதோடு, அதிமுக வேட்பாளர்கள் படுதோல்வி அடைவதற்கான அனைத்து பணிகளையும் தாங்கள் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்