தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேலும் ஆணையம் பரிந்துரை வழங்கும் காலக்கெடுவை ஒரு மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சட்டப்பேரவையில் பேச பாமக சார்பில் அனுமதி கேட்டதற்கு, அவை தலைவர் அப்பாவு அரசியல் செய்ய வேண்டாம் என்று கூறியதன் அடிப்படையில் பா.ம.க.வினர் இன்று (12.04.2023) சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.