Skip to main content

கரோனா வைரஸ் அதிகரித்து வந்தாலும் இந்தச் செய்தி ஆறுதலாக இருக்கிறது... பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ட்வீட்!

Published on 21/05/2020 | Edited on 21/05/2020


 

pmk

 


இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 31- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750- லிருந்து 1,12,359 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,303- லிருந்து 3,435 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 42,298- லிருந்து 45,300 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 63,624 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 


இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸ் பரவல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், தருமபுரி மாவட்டத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து திரும்பியுள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் கரோனா இல்லாத மாவட்டமாக தருமபுரி உருவெடுத்திருப்பது மனநிறைவளிக்கிறது. இதே நிலையைத் தக்கவைக்க வாழ்த்துகள் என்றும், சென்னை-புறநகர் பகுதிகளில் கரோனா பரவல் அதிகரித்து வருவது ஒருபுறமிருக்க மற்ற மாவட்டங்களில் வேகமாகக் கட்டுப்படுத்தப்பட்டு வருவது ஆறுதல் அளிக்கிறது. நேற்று தமிழகத்தின் 33 மாவட்டங்களில் 7 பேருக்கு மட்டும் தான் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பது நம்பிக்கையளிக்கும் செய்தியாகும் என்றும், தமிழகத்தின் 26 மாவட்டங்களில் நேற்று புதிய கரோனா தொற்றுகள் இல்லை என்பது  குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். இதே நிலை தொடர வேண்டும்; தமிழகம் கரோனா இல்லாத மாநிலமாக மாற வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும் ஆகும். இதற்கான நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க அரசு அஞ்சுவது ஏன்?” - ராமதாஸ்

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
 Ramadoss said Why is the government afraid to take action against the Vice-Chancellor of Periyar University?

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க அரசு அஞ்சுவது ஏன் என பா.ம.க நிறுவனத் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளைக் கண்டித்தும், அவை தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த ஆணைகளை செயல்படுத்த வலியுறுத்தியும் பல்கலைக்கழக வளாகத்தில் அறவழியில் போராட்டம் நடத்திய  பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் 77 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்று கேட்டு அவர்கள் அனைவருக்கும் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் விஸ்வநாத மூர்த்தி குறிப்பாணை அனுப்பியுள்ளார். பல்கலைக்கழகத் தொழிலாளர்களை அச்சுறுத்தும்  வகையிலான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஊழல்கள் அதிகரித்துள்ளன. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்புகளை பயன்படுத்தி தமது தலைமையில் தனியார் நிறுவனம் தொடங்கியது உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும், பட்டியலினத்தவர் வன்கொடுமை சட்டத்தின்படியும்  பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். அப்படிப்பட்டவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதை தமிழக அரசும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளராக இருந்த முனைவர் தங்கவேலு மீதான ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்திய தமிழக அரசு குழு, அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதற்கு வசதியாக அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டது. ஆனால், இதை மதிக்காமல் தங்கவேலுவை ஓய்வு பெற அனுமதித்த பல்கலைக்கழக நிர்வாகம் அவருக்கு ஓய்வூதியமும், ஓய்வுக்கால பயன்களும் வழங்க ஆணையிட்டது. இவற்றைக் கண்டித்து தான் பல்கலைக்கழக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இது சட்டத்தின்படி அனுமதிக்கப்பட்ட ஒன்று தான்.

ஆனால், தமக்கு எதிராகவும், தமது நிர்வாகத்துக்கு எதிராகவும் போராட்டம் நடத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாத துணைவேந்தர் ஜெகநாதன், பல்கலைக்கழக பதிவாளர் வாயிலாக  போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் மீது நடவடிக்கை  எடுத்திருப்பது அப்பட்டமான அடக்குமுறை ஆகும். பல்கலைக்கழகத்தில் நடைபெறும் முறைகேடுகளால், 18 வகையான முதுநிலை படிப்புகளுக்கு நடைபெற்ற மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு வெறும் 2 பேர் மட்டுமே வரும் அளவு பல்கலைக்கழகத்தின் பெயர் சீர் கெட்டுள்ளது. இதை சரி செய்ய முடியாத துணைவேந்தர் தமக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது அடக்குமுறையை  கட்டவிழ்த்து விட்டிருப்பதை மன்னிக்க முடியாது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அனைத்து அத்துமீறல்களையும் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது தான், துணைவேந்தரின்  துணிச்சலுக்கும், அடக்குமுறைக்கும் காரணம் ஆகும். பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தவும், தண்டனை பெற்றுத்தரவும் தமிழக அரசு அஞ்சுவது ஏன்? எனத் தெரியவில்லை. தமிழக அரசு இனியாவது அதன் தயக்கத்தை உடைத்து, துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகத் தொழிலாளர்கள் 77 பேருக்கு அனுப்பப்பட்டுள்ள குறிப்பாணையை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Story

“மின் உற்பத்தியை நிறுத்திவிட்டார்கள்” - அன்புமணி ராமதாஸ் பேச்சு!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
They have stopped power generation Anbumani Ramadoss speech

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பின்படி ஜூலை ஒன்றாம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்ததனர்.  இந்நிலையில் மின்கட்டன உயர்வை திரும்ப பெற கோரி பாமக சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகில் இன்று (19.07.2024) ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக  கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “அரசு துறையில் மின் உற்பத்தியை நிறுத்திவிட்டார்கள். ஏனென்றால் 20 ஆயிரம் மெகாவாட் மின் தேவை உச்சத்தில் இருக்கும் போது அரசு சார்பில் செல்லக்கூடிய மின்சாரம் 5 ஆயிரத்து 500 மெகாவாட் தான். 20 ஆயிரம் மெகாவாட் மின் தேவையில் வெறும் 5 ஆயிரத்து 500 மெகாவாட் தான் தமிழக அரசு உற்பத்தி செய்கிறது.

மீதம் உள்ள 14 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரத்தை மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து வாங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக அதிகப்படியான மின்சாரம் தனியாரிடம் இருந்து வாங்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தனியாரிடம் இருந்து வாங்கப்படுகிறது. தனியாரிடம் இருந்து மின்சாரத்தை பெறுவதற்கான காரணம் என்னவென்றால் காசு, பணம், துட்டு, மணி, மணி. அரசுத்துறையில் ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்றால் சராசரியாக 3.40 ரூபாய் தேவைப்படும். ஆனால் உச்சப்பட்ச மின் தேவை உள்ள நேரத்தில் ஒரு யூனிட் மின்சாரம் 12 ரூபாய்க்கு தனியாரிடம் இருந்து வாங்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.