ddd

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன் செல்ல நடைபயணம் மேற்கொண்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ஆம் தேதி அனுசரிக்கப்படும். இதற்கு தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் பசும்பொன் செல்வது வழக்கம்.

Advertisment

இந்த நிலையில் கரோனா ஊரடங்கு என்பதால் மற்ற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் பசும்பொன்னுக்கு வர மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. மேலும் அரசியல் தலைவர்கள் மட்டுமே மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் பசும்பொன் செல்ல அனுமதி வழங்கபட்டுள்ளது.

இந்த நிலையில் தேவர் அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறி அதற்கு எதிராக மதுரை கோரிப்பாளையத்திலிருந்து காளையார்கோவில் வரை நடைபயணம் மேற்கொள்ள முயன்றனர்.

Advertisment

அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் ஊரடங்கை மீறி அனுமதி இல்லாமல் நடைபயணம் மேற்கொண்ட ஐம்பதிற்கும் மேற்பட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றனர், இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.