p chidambaram - nalini chidambaram

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட நேரத்திலேயே அவருக்காக திகார் சிறையின் 7ஆம் எண் அறை தயாராகிக்கொண்டிருந்ததை நம் நக்கீரன்தான் முதன் முதலில் சொன்னது. விதிகளுக்கு உட்பட்டு அவருக்கு தர வேண்டிய சிறப்புச் சலுகைகள் அங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது.

தன் மனைவி நளினி கொடுத்த கம்பராமாயணத்தையும், சில ஆங்கில நூல்களையும் ப.சிதம்பரம் படித்துக்கொண்டிருக்கிறாராம். மேலும் வெளியில் என்ன நடக்கிறது என்பதை அடிக்கடி விசாரித்து தெரிந்துகொள்கிறாராம்.

Advertisment

Advertisment

அதேபோல் தன் கைதுக்கு தமிழகத்தில் இருக்கும் தங்கள் கட்சியனரே பெருசா ரியாக்சன் பண்ணவில்லை என்கிற வருத்தமும் அவருக்கு இருக்கிறது. கட்சியின் அகில இந்தியத் தலைமையும் தனக்காக மாநில கமிட்டிகளை ஒன்று திரட்டிப் போராடவில்லை என்கிற ஆதங்கமும் ப.சிதம்பரத்திற்கு அதிகமாக இருக்கிறதாம்.