Skip to main content

எங்க வேட்பாளருக்கு தமிழுடன் ஐந்து மொழிகள் தெரியும்... - ஐ.பி.செந்தில்குமார்

Published on 25/03/2019 | Edited on 25/03/2019

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் வேலுச்சாமியும் அதிமுக சார்பில் கூட்டணி கட்சியான பாமக வேட்பாளர் ஜோதிமுத்து மற்றும் டிடிவி அணி சார்பாக ஜோதிமணி உள்பட கட்சிகள் களத்தில் குதித்துள்ளனர்.

 

dmk

 

இந்த நிலையில் திமுக வேட்பாளர் வேலுச்சாமி ஆதரித்து ஐ.பெரியசாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் வாக்கு சேகரித்துவருகின்றனர்.
 

இந்த வாக்கு சேகரிப்பின்போது பேசிய ஐ.பி.செந்தில்குமார், “மத்திய அரசும், மாநில அரசும் நம் மக்களை அடிமையாக்கி  வருகிறது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தனிநபர் கடனாக ஒரு நபருக்கு 15,500 ரூபாய்தான் இருந்தது. ஆனால் இன்று 55,060 ரூபாய் ஆகிவிட்டது. அந்த அளவிற்கு மத்திய மாநில அரசுகள் மக்களை கடன்காரர்களாக ஆக்கியிருக்கிறதேதவிர மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை.

 

dmk

 

ஜி.எஸ்.டி. வரி போட்டு நம்ம சாப்பிடும் சாப்பாட்டுக்கு கூட வரி போட்டு வாங்கி வருகிறார்கள். அதுபோல் கேஸ் சிலிண்டர், பெட்ரோல் விலை ஏறி வருகிறது. இந்த மாநகராட்சியில் மக்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியவில்லை. அப்படி இருக்கும்போது குழாய் வரியில் இருந்து வீட்டு வரி வரை நூறு சதவீதம் உயர்த்தி இருக்கிறார்கள். அதைவிட கொடுமை என்னவென்றால் குப்பைக்கு கூட இந்த ஆட்சியில் வரி வாங்கி வருகிறார்கள். இப்படிப்பட்ட ஆட்சிக்கு கூடிய விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

 

நமது வேட்பாளர் வேலுச்சாமிக்கு தமிழ் மொழியோடு ஹிந்தி. மலையாளம். தெலுங்கு. கன்னடம். உருது என 5 மொழிகள் தெரியும். அதன் மூலம் உங்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் அதை பாராளுமன்றத்தில்  எதிரொலிக்க வைப்பார் அங்கு தமிழில் மட்டுமல்ல அனைத்து மொழிகளிலும் பேசி நம் தொகுதி மக்களுக்கு தேவையான திட்டத்தையும் சலுகைகளையும் வாங்கிக் கொடுப்பார்” என்றார்.

 

 

 


 

சார்ந்த செய்திகள்