/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_464.jpg)
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.க்கும் இடையே வீடியோ விளம்பங்கள் போட்டி போட்டுக்கொண்டு உருவாகிக்கொண்டு இருக்கிறது.
சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் வர இருப்பதால் முதன்முதலில் ஈ.பி.எஸ். பேப்பர் விளம்பரமும், வீடியோ விளம்பரமும் கொடுத்தார். அதைத் தொடர்ந்து ஓ.பி.எஸ். பேப்பர் விளம்பரமும் வீடியோ விளம்பரமும் செய்தார். இதில், முன்னாள் முதல்வர்களானபேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோர் படங்களுடன்ஈ.பி.எஸ். படத்தையும் போட்டு விளம்பரம் செய்திருந்தார். ஆனால், ஈ.பி.எஸ்.தனது எந்த ஒரு பேப்பர் விளம்பரத்திலும் வீடியோ விளம்பரத்திலும் ஓ.பி.எஸ். படத்தைப் போடவில்லை. இதனால், ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்துவந்தனர். அதன் எதிரொலியாகத்தான் ஓ.பி.எஸ். முதன்முதலில் ‘மண்ணையும் மக்களையும் வணங்குகிறேன்’ என்று ஒரு வீடியோ தயாரித்து, அது வாட்ஸ்அப், ஃபேஸ்புக் பக்கங்களில் வைரலாக பரவிவந்தது.
அதில், ஈ.பி.எஸ். படத்தையும்போட்டு, 10 ஆண்டுகளில் 100 ஆண்டு சாதனைகள் என்று முன்னாள் முதல்வர்களுடன் ஈ.பி.எஸ். படத்தையும்போட்டு வாக்களிக்குமாறு இரட்டை விரலை காட்டி, இரட்டை இலையும் காண்பித்தார் ஓ.பி.எஸ். அப்படி இருந்தும்கூட, ஈ.பி.எஸ். அடுத்தடுத்து கொடுத்துவரும் வீடியோ விளம்பரங்களில் ஓ.பி.எஸ். படத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். இதனால், ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தொடர்ந்து மனம் நொந்துபோய்வந்தனர்.
இந்த நிலையில்தான், ஓ.பி.எஸ்.-ன் இரண்டாவது வீடியோ வாட்ஸ்சப். ஃபேஸ்புக்கில் பரவி வருகிறது. அதில், ‘ஜல்லிக்கட்டு உலகத் தமிழர்களின் உரிமைக் குரல், நாடு கேட்ட தீர்ப்பையே வாங்கித்தந்த பெருமையே, தை பிறந்த நாளிலேயே தைரியம் பிறந்ததே. இந்த மண்ணும், மக்களும், கதிரும், காளையும் எங்க ஜல்லிக்கட்டு நாயகனுக்கு நன்றி சொல்கிறது’ என்றும், இந்த 10 ஆண்டில் 100 ஆண்டு சாதனைகள் என இப்படிவரும் அந்த வீடியோ விளம்பரத்தில் ஜெ.வுடன் ஓ.பி.எஸ். அதன்பின் பிரதமர் மோடி, ஈ.பி.எஸ். இருக்கிற மாதிரியும் ஓ.பி.எஸ்.-ன் இரண்டாவது வீடியோவும் வெளிவந்திருக்கிறது.
அந்த அளவுக்கு ஈ.பி.எஸ். தன்னை மதிக்காவிட்டாலும் ஈ.பி.எஸ். படத்தைக் காட்டி ஓ.பி.எஸ். விளம்பரம் செய்துவருவது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது என்று அனைத்து தரப்பு மக்களும் ஒருபுறம் பேசி வருகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)