OPS letter to Election Commission

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நேற்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு முன்னதாக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமையக கதவை உடைத்து உள்ளே நுழைந்தார்.

Advertisment

இந்த நிகழ்வின்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இரு தரப்பினரும் மாறிமாறி தாக்கிக்கொண்டனர். இதையடுத்து, வருவாய் துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்

Advertisment

இந்த நிலையில், ஒருங்கிணைப்பாளர்களைத் தவிர வேறு யாரும் அதிமுகவை உரிமை கொண்டாட அனுமதிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்ற முறையில் தன்னிடம் தான் கட்சி இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதமானது தூதஞ்சல் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.