The OBS-EPS conflict is over! OBS boycotts demonstration

ஜெயலலிதா பிறந்த நாளின் போது, சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கடந்த 24-ந் தேதி சந்தித்துப் பேசினார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த சந்திப்பிற்கு ஓ.பி.எஸ்சை அழைத்துச் செல்லவில்லை. ஓ.பி.எஸ்சிடம் சொல்ல கூட இல்லை எடப்பாடி. இத்தனைக்கும், ஓ.பி.எஸ். கேட்டும் ஜெயக்குமாரைச் சந்திக்க செல்வது பற்றி மூச்சுவிடவில்லை இ.பி.எஸ்.

Advertisment

இந்த விசயமறிந்து, ஏகத்துக்கும் கோபமான ஓ.பி.எஸ், "இனியும் பொறுப்பதற்கில்லை" என்று ஆவேசப்பட்டார். இந்த செய்தியை முதன் முதலில் நக்கீரன் இணையதளத்தில் நாம் தான் பதிவு செய்தோம். அந்த செய்தியின் இறுதியில், ஜெயக்குமாரை சந்திக்க ஓ.பி.எஸ். திட்டமிட்டுள்ளார் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறோம்.

Advertisment

இந்த நிலையில், ஜெயக்குமார் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், அதனை புறக்கணித்து விட்டு, தனது நட்பில் இருக்கும் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோருடன் புழல் சிறைக்கு சென்று ஜெயக்குமாரை சந்தித்திருக்கிறார் ஓ.பி.எஸ்.

அந்த சந்திப்பில், "நீங்கள் கலங்காதீர்கள். உங்களுக்கு பக்கபலமாக நாங்கள் இருப்போம். எடப்பாடி பழனிச்சாமி என்னிடம் சொல்லாமலே உங்களை சந்திக்க வந்துவிட்டார்" என்று சொல்லி, ஜெயக்குமாருக்கு தெம்பூட்டியிருக்கிறார் ஓ.பி.எஸ். மற்றவர்களும் ஜெயக்குமாருக்கு நம்பிக்கையாக பேசியுள்ளனர்.

சந்திப்பு முடிந்து வெளியே வந்த ஓபிஎஸ், "அதிமுக இன்று நடத்தும் ஆர்ப்பாட்டம் என்னிடம் கேட்காமலே முடிவு எடுக்கப்பட்டது" என்று குற்றம்சாட்டியுள்ளார். உள்ளாட்சி தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, ஓபிஎஸ்-இபிஎஸ் மோதல் முற்றத் துவங்கியுள்ளது. இந்த மோதலில் சமாதானம் இருக்கப் போவதில்லை என்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.