அதிமுகவில் மீண்டும் ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ் போட்டி யுத்தம் தொடங்கியுள்ளது.

Advertisment

மதுரையில் ராஜேந்திர பாலாஜியின் படத்தோடு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. "மீண்டும் எடப்பாடி, வேண்டும் எடப்பாடி", "மக்களின் முதல்வர் எடப்பாடியாரை குறை சொன்னால் நாக்கு அழுகிவிடும்","எடப்பாடியாரை புறம் பேசுபவர்கள் இதைப் படித்த பிறகாவது திருந்தட்டும்" என்று மதுரை நகரெங்கும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக ஓ.பி.எஸ் தரப்பினர் "அரசியலில் முதிர்ச்சி, அதிகாரத்தில் அடக்கம்,என்றென்றும் தமிழர் தலைவர் ஓ.பி.எஸ் வழியில்" என்று பசும்பொன் தேவர் மற்றும் ஓ.பி.எஸ் படத்துடன் எடப்பாடியார் போஸ்டருக்கு பதிலடியாக போஸ்டர்கள் ஒட்டபட்டுள்ளது. இது அ.தி.மு.க கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது. அ.தி.மு.கவில் மீண்டும் ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ் போட்டா போட்டி கட்சிக்குள் தொடங்கிவிட்டதைகாட்டுகிறதோ என்று எண்ண தோன்றுகிறது.

Advertisment