Skip to main content

மகனை வைத்து அதிமுகவில் அரசியல் செய்யும் ஓபிஎஸ்! கடுப்பில் எடப்பாடி!

Published on 30/07/2019 | Edited on 30/07/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அதிமுக சார்பாக வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக அரசு ஆட்சி அமைத்த உடன் அமைச்சரவையில் தனது மகனுக்கு எப்படியாவது அமைச்சர் பதவி வாங்கி விட வேண்டும் என்று ஓபிஎஸ் டெல்லியில் முகாமிட்டார். பின்பு கட்சியில் சீனியரான வைத்தியலிங்கத்துக்கும் அமைச்சர் பதவி வேண்டும் என்று எடப்பாடி தரப்பு கருதியதால் அவருக்கு அமைச்சர் பதவி கேட்டு பாஜகவை அணுகியது. 

 

ops



ஆனால் அதிமுகவில் அமைச்சர் பதவியால் நடக்கும் உட்கட்சி பூசலால் யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்க பாஜக முன்வரவில்லை. இதனையடுத்து முத்தலாக் மசோதாவை ஆதரித்து ஓபிஎஸ் மகனும் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் ஆதரவு தெரிவித்தது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் வேலூரில் நடக்கும் தேர்தலில் அதிமுகவிற்கு முஸ்லீம் வாக்குகள் பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரவீந்திரநாத் குமார் தெரிவித்த ஆதரவிற்கு பின்னால் ஒபிஎஸ்ஸின் அரசியல் திட்டம் இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். சில நாட்களுக்கு முன் டெல்லி சென்ற பன்னீர் பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்தார். அப்போது தன் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கோருவது பற்றித்தான் பேசியிருக்கிறார். அதிமுக சார்பில் ரவீந்திரநாத் மட்டும் அமைச்சராக வேண்டும். 


அப்போது தான் தமிழகத்தில் அதிமுக ஆட்சி முடிந்தாலும் அரசியலில் தனக்கென்று ஒரு இடம் கிடைக்கும் என்று ஓபிஎஸ் திட்டம் போடுவதாக தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே கட்சியில் இருக்கும் சீனியர்கள் மற்றும் தனது ஆதரவாளர்களுக்கு ராஜ்யசபா எம்.பி சீட்டில் ஆதரவாக இருக்கவில்லை என்ற பேச்சும் அதிமுகவில் நிலவி வருகிறது. மேலும் தற்போது வேலூர் தேர்தல் நெருங்கிய நிலையில், நீட் தேர்வும் வேண்டாம், நெக்ஸ்ட் தேர்வும் வேண்டாம் என்று நாடாளுமன்ற மக்களவையில் ரவீந்திரநாத் குமார் பேசியிருப்பது குறிப்படத்தக்கது. அதே போல் மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில் மத்திய அரசு தலையிட கூடாது என்றும் பேசியுள்ளார்.     

சார்ந்த செய்திகள்