நிதீஷ்குமாரின் கதை இத்தோடு முடிந்துவிட்டது என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

Advertisment

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், தனது பதவிக்காலத்தின் போது மாட்டுத்தீவண ஊழலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டார். இந்த வழக்குகளுக்கான தீர்ப்பு வரிசையாக வழங்கப்பட்டு வரும் நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

Advertisment

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்த அவர், ‘நான் சிறைக்கு அனுப்பப்பட்டதில் இருந்தே பீகார் மாநிலத்தில் வன்முறை அதிகரித்துள்ளது. அத்தனை வன்முறைகளுக்கும் பா.ஜ.க. காரணமாக இருக்கிறது. முதல்வர் நிதீஷ்குமாரின் மீதிருந்த நன்மதிப்பு சுத்தமாக தற்போது இல்லை. அவரது கதை முடிந்துவிட்டது’ என தெரிவித்துள்ளார்.