Skip to main content

'என்.ஐ.ஏ தான் விசாரிக்க வேண்டும்' - எல். முருகன் வலியுறுத்தல்

Published on 26/10/2023 | Edited on 26/10/2023

 

 'NIA should investigate'- L. Murugan insists

 

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கருக்கா வினோத். இவர் நேற்று ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பாஜக உள்ளிட்ட சில கட்சி பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பாஜக இணை அமைச்சர் எல். முருகன் புதிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

 

நேற்று நிகழ்ந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், கருக்கா வினோத் என்பவர் ஏற்கனவே தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றதும், ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் தற்போது ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதும் தெரிய வந்திருந்தது.

 

இந்நிலையில் இவர் மீது வெடி பொருள் தடைச்சட்டம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ரவுடி கருக்கா வினோத்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நவம்பர் 9 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ரவுடி கருக்கா வினோத் இன்று (26.10.2023) காலை 06.30 மணியளவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

nn

 

இந்த சம்பவத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை, இணையமைச்சர் எல். முருகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே பாஜக இணைய அமைச்சர் எல். முருகன் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் மாநில அரசு முறையாக விசாரணை மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளதோடு, முறையான விசாரணையை என்.ஐ.ஏ அமைப்பு தான் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்