Skip to main content

"ஆசி யாத்திரைக்கு எந்த மக்களும் ஆசி வழங்க மாட்டார்கள்!" - போட்டுத் தாக்கும் நாஞ்சில் சம்பத்!

Published on 23/08/2021 | Edited on 23/08/2021

 

NANJIL SAMPATH BLAST ON MAKKAL AASI YATRA

 

பாஜகவின் 'மக்கள் ஆசி யாத்திரை'க்கு பொதுமக்களின் ஆசி எப்போதும் கிடைக்காது எனத் திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.


சமீபத்தில், நக்கீரன் யூ-ட்யூப் தளத்தில் நாஞ்சில் சம்பத்தின் நேர்காணல் வெளியானது. அதில் அவர், "தமிழ்நாட்டுக்கு இடையூறாக இருப்பது டெல்லி தான் என்பது எல்லாருக்கும் தெரியும். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தரவேண்டியது என்னென்ன, தந்தது என்னென்ன என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட்டது திமுக அரசு. அது மக்கள் மத்தியில் இப்போது, விவாதப் பொருளாக மாறிவிட்டது. "எங்களுக்கு வருமானமும் இல்லை; வரி போடுகிற அதிகாரமும் இல்லை எப்படி நிர்வாகத்தை நடத்துவது" எனக் கேள்வி எழுப்பினார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இவ்வளவு நிதிப்பற்றாக்குறைக்கு மத்தியிலும், ஒரு பைசா கூட வரி விதிக்காமல், பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத பாஜக, மக்களைத் திசைதிருப்பும் நோக்கில், 'மக்கள் ஆசி யாத்திரை'யை நடத்த திட்டமிடுகிறார்கள்.

 

ஆனால் பெட்ரோல், கேஸ் விலையேற்றமும் விவசாயிகளின் போராட்டமும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் எந்த மக்களும் அவர்களுக்கு ஆசி வழங்க மாட்டார்கள்" இவ்வாறு கூறினார்.

 


சார்ந்த செய்திகள்

Next Story

'தூர்தர்ஷனை காவிமயமாக்காதே!'-மோடி அரசுக்கு கலை இலக்கியப் பெருமன்றம் கண்டனம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
nn

'தூர்தர்ஷனை காவிமயமாக்காதே' என பாஜக அரசுக்கு கலை இலக்கியப் பெருமன்றம் கண்டனம் விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் மருத்துவர் த. அறம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்திய ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ஒளிபரப்பு நிறுவனம்  தூர்தர்ஷன். சமீபத்தில் அதன் இலச்சினையின் நிறம் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளது.

தூர்தர்ஷன் பொதிகை என்பதை சமீபத்தில் 'டிடி தமிழ்' என்று மாற்றிய தூர்தர்ஷன் நிறுவனம், அதனுடைய இலச்சினையும் காவி நிறத்திற்கு மாற்றியுள்ளது.

இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் காவி நிறம் என்பது ஒரு கட்சியின் அடையாளமாக இருக்கும்போது, இந்த நிறம் மாற்றம் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. அந்தக் கட்சிக்காக அரசு தொலைக்காட்சி நிறுவனமே கட்டணம் இல்லாமல் பிரச்சாரம் செய்கிறதா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளது.

தூர்தர்ஷன் மேலதிகாரிகள் இந்த நிறமாற்றம் காவிநிறமல்ல, ஆரஞ்சு நிறம் என விளக்கம் அளித்துள்ளனர்.ஏன் இந்த நிறமாற்றம் தேர்தல் நடைபெறும் போது செய்தார்கள்? அதற்கான அவசரத் தேவை என்ன வந்தது இப்போது? இது அந்தக் கட்சிக்கான அரசியல் ஆதாயத்திற்கானது என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.

சமீபத்தில் ஏப்ரல் 5 அன்று இரவு 8 மணி மணிக்கு 'கேரள ஸ்டோரி' படத்தை அரசு நிறுவனமான தூர்தர்ஷன் ஒளிபரப்பியது மிகுந்த சர்ச்சையை உண்டு பண்ணியது. கேரள முதல்வர் வேண்டுகோளையும் மீறி இது ஒளிபரப்பப்பட்டது.

ஒரு மதப் பிரிவினரை, ஒரு மாநிலத்தை வஞ்சிக்கும் வகையில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் நீதிமன்ற விசாரணையில் இருக்கும் போது, எவ்வாறு ஒரு அரசு தொலைக்காட்சி நிறுவனமே தேர்தல் நேரத்தில் அதை ஒளிபரப்பு செய்யலாம்?

தேர்தல் நேரத்தில் மத மோதலை உண்டு பண்ண ஒரு அரசு தொலைக்காட்சி நிறுவனமே தூண்டியதாகவே கருத வேண்டியுள்ளது.

இதையெல்லாம் தேர்தல் ஆணையம் ஏன் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறது? தேர்தல் ஆணையம் இருக்கிறதா? என்ற கேள்விகள் எல்லாம் இந்திய மக்களின் மனங்களில் எழுந்துள்ளது.

எனவே உடனடியாக தேர்தல் ஆணையம் தூர்தர்ஷன் இலச்சினை கலர் மாற்றத்தை ரத்து செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக்கொள்கிறது' என்று கூறப்பட்டுள்ளது.

Next Story

குஜராத்தில் தீவிரமடையும் போராட்டம்; நெருக்கடியில் பாஜக

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Struggle intensifies in Gujarat BJP in crisis

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த முறை ஆளும் பாஜக அரசு குஜராத்தை கைப்பற்ற வேண்டும் எனத் தீவிரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், குஜராத்தின் மக்களவைத் தொகுதிகளில் ஒன்றான ராஜ்கோட்டில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா களமிறக்கப்பட்டுள்ளார்.

இத்தகைய சூழலில் மத்திய அமைச்சர் ரூபாலா தனது தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் மேற்கொண்ட பிரச்சாரம் ஒன்று தற்போது பாஜகவிற்கு பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. கடந்த மார்ச் 22 ஆம் தேதி பிரச்சாரத்தில் பேசிய மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா, ''ராஜபுத்திர ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களுடன் இணைந்து செயல்பட்டார்கள். அதுமட்டுமல்லாமல், அவர்கள் தங்களது வீட்டுப் பெண்களை ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு திருமணம் செய்துகொடுத்தனர். ஆனால் எங்கள் சமூகம் மதம் மாறவில்லை. எங்கள் சமூகம் அத்தகைய உறவுகளை ஏற்படுத்தவில்லை..” எனச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு ராஜபுத்திர சமுதாயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, நாடுமுழுவதும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, தவறை உணர்ந்த மத்திய அமைச்சர் ரூபாலா ராஜபுத்திர சமுதாயம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பலமுறை மன்னிப்பு கேட்டுக் கொண்டார். ஆனாலும், ராஜபுத்திர சமுதாய மக்கள் மனம் மாறவில்லை. ரூபாலாவை பதவி நீக்கும்வரை போராட்டம் தொடரும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அத்துடன் ராஜ்கோட் தொகுதியில் நிறுத்தப்படும் ரூபாலாவை திரும்பப்பெற வேண்டும் எனப் பாஜகவுக்கு ராஜபுத்திரர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். பாஜக தரப்பில் இதற்கு செவிசாய்க்காததால், குஜராத்தின் 26 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜகவுக்கு எதிராக தேர்தல் களத்தில் போராடுவோம் என்று ராஜபுத்திரர்கள் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

Struggle intensifies in Gujarat BJP in crisis

இந்நிலையில்  பாஜக வேட்பாளர் புருஷோத்தம் ரூபலாவை மாற்ற பாஜக மாற்ற மறுத்துவிட்ட நிலையில் குஜராத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.  சபர்கந்தா என்ற இடத்தில் நடைபெற்ற பாஜக பிரச்சார் கூட்டத்துக்குள் புகுந்த ராஜ்புத் சமூகத்தினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு  பாஜக எம் எல் ஏ ரமண்லால் வோராவை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் எதிர்ப்பு முழக்கம் எழுப்பினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் குண்டு கட்டாக இழுத்துச் சென்று அப்புறப்படுத்தினர். மேலும் குஜராத்தில் ராஜ்புத் சமூகத்தினரின் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் குஜராத்தில் பாஜகவுக்கு நெருக்கடி அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.