'Nam Tamilar Party has been merged with DMK' - RS Bharati

நெல்லையில் துணை முதல்வர் உதயநிதியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், ''புதிது புதிதாககட்சிகள் ஆரம்பித்து விட்டு பேசுகிறார்கள். சீமானுக்கு யோக்கிதை இருந்தால்இதற்கு பதில் சொல்ல வேண்டும். காரணம் என்னவென்று கேட்டால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இளைஞர்களை வைத்துக் கொண்டு ஏமாற்றுகிறார்.

Advertisment

'நாம் தமிழர்' என கட்சி வைத்திருப்பதே ஃபிராட். சட்டப்படி பார்த்தால் அந்த பேரை வைக்கக் கூடாது. இங்கு இருக்கின்ற மூத்தவர்கள், 1967-ல் கட்சியில் இருந்தவர்களுக்கெல்லாம் தெரியும். இதேபகுதியில் தான் சி.பா.ஆதித்தனார் நாம் தமிழர் கட்சியைத் தொடங்கி நடத்தினார். 1967 தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் திமுகவின் ஆதரவுடன் போட்டியிட்டு வென்றார். அப்பொழுது சி.பா.ஆதித்தனாரைசபாநாயகராக அண்ணா நியமித்தார்.

Advertisment

கலைஞர் முதலமைச்சரான உடன் சபாநாயகராக இருந்த ஆதித்தனார் நாம் தமிழர் கட்சியை 1967-ல் திமுகவில் இணைத்து விட்டார். நாம் தமிழர் கட்சிகலைக்கப்பட்டு விட்டது. நாம் தமிழர் கட்சியே கிடையாது. காரணம் கலைத்துவிட்டு ஆதித்தனார் திமுகவில் சேர்ந்து திமுகவில் மந்திரி ஆகிவிட்டார். அதற்கு பிறகு இன்று போர்ஜரியாக கட்சி பெயரை வைத்துக் கொண்டு இருக்கிறார் சீமான். சட்டப்படி நான் கேஸ் போட்டால் கட்சிக்கு பேர் இருக்காது. என் கை ஆபத்தான கை நான் கேஸ் போட்டால் வெளியே வரவே முடியாது'' என்றார்.