mylapore MLA who pointed out Periyar's speech!

சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் துறை சார்ந்த மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. அவ்வகையில், இன்று இந்துசமய அறநிலைத் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. இதில், பேசிய மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு, பெரியார் கடைசியாக (19 டிசம்பர் 1973 அன்று) சென்னை தி.நகரில் ஆற்றிய இறுதி பேச்சின் சில வரிகளை அவரது மொழியிலேயே பேசி காட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

Advertisment

மேலும், “இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற கனவு நிறைவேறி இருப்பதின் மூலம் தி.மு.க. என்பது தேர்தலுக்கான கட்சி அல்ல இது சமுதாய புரட்சி இயக்கம்” என்றார். மேலும் தனது தொகுதியை ஒரு ஆன்மிக சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும், குடிசை பகுதி வாழ் மக்களுக்கு அங்கேயே வீடு கட்டி தரவேண்டும், புதிய சட்டமன்ற வளாகம் மீண்டும் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என்று பல கோரிக்கைகளை விடுத்தார்.

Advertisment