Skip to main content

''முருகன் கோவிலுக்கு லிஃப்ட் வேண்டும்''-கோரிக்கை வைத்த ஜவாஹிருல்லா!

Published on 12/04/2022 | Edited on 12/04/2022

 

 '' Murugan temple needs lift '' - M. H. Jawahirullah demanded!

 

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18,19 ஆகிய தேதிகளில் 2022-2023ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான விவாதம் 21 முதல் 24ஆம் தேதி வரை நடந்தது. இந்த நிலையில், மீண்டும் கூடிய சட்டசபையில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்யக்கோரி சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டமன்றத்தில் மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா பேசுகையில், ''முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமி மலை முருகன் திருக்கோவில் எனது தொகுதியான பாபநாசத்தில் உள்ளது. சமீபத்தில் நான் அங்கு ஆய்வுக்குச் சென்றிருந்தேன். அங்கு வரும் வயதானவர்கள், மூட்டுவலி உடையவர்கள் படிகளில் ஏறி சென்று தரிசனம் செய்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அந்த கோவிலில் மின்தூக்கி அமைத்துத்தர அமைச்சர் முன்வருவரா? என சபாநாயகர் மூலம் அறிய விரும்புகிறேன்'' என்றார்.

 

 '' Murugan temple needs lift '' - M. H. Jawahirullah demanded!

 

இதற்கு பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ''நான்காம் படைவீடான சுவாமி மலை குறித்து பேசிய உறுப்பினர் முதலில் நன்றி சொல்வார் என எதிர்பார்த்தேன். கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையின்படி அங்கு தங்கும் விடுதிக்கு ஒப்பந்தம் அறிவித்து விடுதி கட்டப்படுவதற்கான பணிகளை தமிழக முதல்வர் துவங்கி வைக்க இருக்கிறார். ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 5 திருக்கோவில்களில் மின்தூக்கி அமைப்போம் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில் அந்த எண்ணிக்கை 7-ஐ தாண்டியுள்ளது. கேட்டதெல்லாம் தருகின்ற அரசு இது. எனவே சுவாமி மலைக்கோவிலில் கள ஆய்வு மேற்கொண்டு அதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தால் நிறைவேற்றித் தரப்படும்'' என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''அதை விழாவாகக் கொண்டாட நாங்கள் விரும்பவில்லை'' - பேரவையில் முதல்வர் பேச்சு

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
"We don't want to celebrate it as a festival" - Chief Minister's speech in the meeting

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று கூட்டத் தொடருக்கான கடைசி நாள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவையில் கலைஞர் நினைவிடம் திறப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அவரது உரையில், ''நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்ற தலைவன். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய கலைஞரின் நினைவகம் முழுமை அடைந்திருக்கிறது. அது மட்டுமல்ல கலைஞரின் நினைவிடம் மட்டுமல்லாது அவரை உருவாக்கிய நம் தாய் தமிழ்நாட்டின் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டிருக்கிறது.

அண்ணாவின் நினைவகமும், கலைஞரின் நினைவகமும் புதுப்பிக்கப்பட்டு வருகிற பிப்.26 ஆம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்பட இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எதற்காக நான் இதை குறிப்பிட்டு சொல்லி இருக்கிறேன் என்று சொன்னால், இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எல்லாம் அடிக்கவில்லை.அதை விழாவாகக் கொண்டாட நாங்கள் விரும்பவில்லை. ஆகவே இதை நிகழ்ச்சியாகவே நடத்த விரும்புகிறோம். அப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லா கட்சிகளுடைய உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என்று சபாநாயகர் மூலமாக நான் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கு உங்கள் மூலமாக அழைப்பு விடுத்து இதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

Next Story

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் (படங்கள்)

Published on 07/02/2024 | Edited on 07/02/2024

 

 

2024 ஆம் ஆண்டுக்கான மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் இன்று (07-02-24) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.