Skip to main content

மோடியின் தீபாவளி! கப்பற்படையினர் எதிர்பார்ப்பு! 

Published on 06/11/2020 | Edited on 06/11/2020
dddd

 

கரோனா நெருக்கடிகளால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் தினசரி வாழ்க்கையில் இன்னும் ஒளி பிறக்கவில்லை. அதனால், இந்த வருடம் தீபாவளியை கொண்டாடுவதில் ஏமாற்றமடைந்துள்ளனர். தீபாவளி வந்துடுச்சா? என கேட்குமளவுக்கு அவர்களிடம் விரக்தி எதிரொலிக்கிறது. 

 

இந்த நிலையில், இந்த வருட தீபாவளியை பிரதமர் மோடி எங்கே கொண்டாடுவார்? என்கிற கேள்வி பாஜகவில் எதிரொலித்தபடி இருக்கிறது. பொதுவாக, தீபாவளி பண்டிகை காலத்தில் டெல்லியில் மோடி இருப்பதில்லை. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது, பண்டிகை காலங்களில் தனது தேசப் பற்றினை வெளிப்படுத்துவதில் ஆர்வம் கொண்டிருப்பவர். 

 

அந்த வகையில் தனது தீபாவளி கொண்டாட்டங்களை சில வருடங்களாக இந்திய ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களுடன் வைத்துக் கொண்டார். அந்த வகையில், இந்த வருடமும் தங்கள் முகாம்களுக்கு மோடி வருவார் என இந்திய ராணுவத்தினர் சொல்லி வருவதாக தகவல்கள் கசிகின்றன. 

 

இதற்கிடையே, பிரதமரின் தீபாவளி இந்த முறை ராணுவத்தினரோடு இல்லை என்கிற ஒரு தகவலும் மத்திய அரசின் உயரதிகாரிகள் தரப்பில் பரவி வருகிறது. 

 

இது குறித்து டெல்லி வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘’ தேசத்தின் பாதுகாப்பில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களை கௌரவப்படுத்தும் வகையிலும், அவர்களின் தியாகத்தை போற்றி புகழும் வகையிலும் தீபாவளி பண்டிகையின் போது ராணுவ வீரர்களை சந்தித்து வாழ்த்துகள் கூறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்த வருடம், ராணுவதினரை சந்திக்கும் முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. அதேசமயம், தேசத்தை பாதுக்காக்கும் முப்படைகளில் ஒன்றான கப்பற்படை வீரர்களை சந்தித்து வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ள பிரதமர் விரும்புவதாகத் தெரிகிறது. இது குறித்து, கப்பற்படை தளபதியுடன் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அதனால், பிரதமரின்  தீபாவளி இந்த முறை கப்பலில் இருக்கலாம்‘’ என்கிற தகவல்களும் உலாவருகின்றன.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்ச்சையான முன்னுரை; மோடி நூல் வெளியீட்டில் பங்கேற்காத இளையராஜா

Published on 16/09/2022 | Edited on 16/09/2022

 

Ilayaraja not participate modi and ambedkar book launch

 

ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்திற்கு  இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அம்பேத்கரையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு இளையராஜா எழுதிய முன்னுரை தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிடுவது தவறானது என்று ஒருதரப்பும், இல்லை அது சரியான கருத்து என்று மற்றொரு தரப்பும் இருவேறு கருத்துக்களை மாறி மாறி தெரிவித்தனர். இதன்பிறகு  இளையராஜா மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 

இந்நிலையில் மோடியும் அம்பேத்கரும் என்ற புத்தகம் இன்று டெல்லியில் வெளியிடப்பட்டது. மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற  விழாவில் புத்தகத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் மத்திய அமைச்சர் எல். முருகன், குஷ்பு மற்றும் பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்ட நிலையில் இந்த நூலுக்கு முன்னுரை எழுதிய இளையராஜா பங்கேற்கவில்லை. இது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. 

 

 

Next Story

தீபாவளி ஷாப்பிங்! கையும் களவுமாகச் சிக்கிய பெண்!

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

Deepavali Shopping! Girl caught  theft in trichy
                                                 கோப்புப் படம் 

 

தமிழ்நாடு முழுவதும் வரும் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவிருக்கிறது. இதற்காகப் பொதுமக்கள், விடுமுறை நாளான நேற்று துணிகளை வாங்கக் குவிந்தனர். இதில் கூட்டத்தோடு கூட்டமாகத் திருடர்களும் தங்கள் கைவரிசைகளைக் காட்டி வருகின்றனர். அந்த வகையில் நேற்று திருச்சியில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் வாடிக்கையாளர்களிடம் கைவரிசை காட்டாமல், வாடிக்கையாளர்கள் போல் கடையில் கைவரிசை காட்டிய பெண் வசமாகச் சிக்கினார். 

 

திருச்சியில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில், வாடிக்கையாளர்களுடன் வாடிக்கையாளரைப் போல் கடைக்குள் சென்ற பெண் ஒருவர், 3 பேண்ட், 4 சட்டை, 3 டீ சர்ட் உள்ளிட்டவற்றைத் தான் அணிந்திருந்த ஆடைக்குள் மறைத்து வைத்துத் திருடினார். இதனைக் கவனித்த பணியாளர்கள் அவரை கையும் களவுமாகப் பிடித்துக் கடை மேலாளரிடம் கொடுத்தனர். அவர் காவல்துறையிடம் இதுகுறித்து புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் கோட்டை குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அப்பெண்ணைச் சிறையில் அடைத்தனர்.