Published on 15/03/2021 | Edited on 15/03/2021
திருவாரூர் மாவட்டம், திருக்குவளையில் இன்று மாலை தனது பிரச்சாரத்தை துவங்குவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.
முன்னதாக திமுக தலைவரை வரவேற்க, திமுக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு, திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் இனிகோ இருதயராஜ், திருவெறும்பூர் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக கூட்டணிக் கட்சியான மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் மனப்பாறை தொகுதியில் போட்டியிடும் அப்துல் சமது உள்ளிட்டோர் வரவேற்க வந்திருந்தனர்.