/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-6_395.jpg)
திருச்சி தெற்கு மாவட்டம்மாநகரம் கிழக்கு தொகுதியில் இந்திய கூட்டணியின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்துரை வைகோவை ஆதரித்துமாநகரக் கழகச் செயலாளர்மதிவாணன் தலைமையில் கலைஞர் நகர் பகுதி கழகச் செயலாளர் மணிவேல் முன்னிலையில், மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரும், கட்சியின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ராமகிருஷ்ணா நகர், இலுப்பூர் ரோடு, கள்ளத்தெரு, உலகநாதபுரம், எஸ்.எஸ் மஹால் தெரு, IMPERIAL பேக்கரி ரோடு, காஜா நகர், சமது பள்ளி, வி.எஸ்.எம் மஹால், காஜா நகர் குடிசைப்பகுதி,மங்கம்மாள் சாலை கோகுலே தெரு, ஐயப்பநகர், சபரி மில்ஸ், லூர்துசாமி பிள்ளை தெரு, பாண்டியன் சாலை, ஐயர் தோட்டம் சாத்தனூர், கவிபாரதி நகர், உடையான்பட்டி சந்தை, ரயில்வே கேட், தென்றல் நகர், பிள்ளையார் கோவில், கே.கே.நகர்,கே.கே நகர் பேருந்து நிலையம், கோவர்தன் கார்டன், ஆல்பா ஸ்கூல் ரோடு, காந்திநகர், ஜே.கே.நகர், ஆர்.எஸ் புரம், திலகர் தெரு, திலகர் திடல், பட்டத்தம்மாள் தெரு, செம்பட்டு, புதுத்தெரு, வி.எம்.டி. ரோடு, அந்தோணியார் கோவில் தெரு, காவேரி நகர், ஸ்டார் நகர்உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_833.jpg)
இந்நிகழ்வில், சட்ட மன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், மாவட்ட துணைச் செயலாளர் லீலாவேலு, வட்ட செயலாளர்கள் கண்ணன், ராஜேந்திரன், ஜாபர் அலி, சாமுவேல், கலிய மூர்த்தி, மகாலிங்கம், விஜய் ஆனந்த், துரைசாமி, பன்னீர் செல்வம், சேகர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கழகநிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் கே என் நேரு பேசுகையில், “திருச்சிக்கு மட்டும் ஆட்சிக்கு வந்த இந்த ரெண்டே முக்கால் ஆண்டு காலத்தில் 3000 கோடிக்கு மேற்பட்ட தொகைகளை தந்து மாநகரின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நமது முதல்வர் உதவியுள்ளார் மாநிலத்திற்கு தேவையான நிதிகளை தராமல் மாநில வளர்ச்சிக்கு தடையாக இருக்கிற ஒன்றிய அரசை நீக்கிட தேர்தல் நெருங்கியவுடன் மாதத்திற்கு நான்கு முறை தமிழகத்திற்கு வருகின்ற பாரதிய ஜனதா தலைவர்கள் தமிழகத்தில் ரோட் ஷோக்களை நடத்துவது மட்டுமே அவர்களது வாடிக்கையாக இருந்து கொண்டிருக்கிறது என மக்களிடம் எடுத்துக் கூறி மறுமலர்ச்சி திமுக வேட்பாளர் துரை வைகோ அவர்களுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி அவர்களின் உரையில்,நம் மாநிலத்திற்கு தேவையான நிதிகளைப் பெறுவதற்கு நமக்கு அனுசரணையான அரசு ஒன்றியத்தில் அமைந்திட கழகத் தலைவர் தமிழக முதல்வர் அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளர் துரை வைகோ அவர்களுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களிக்கும் படி கேட்டுக் கொண்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)