Skip to main content

கமலுக்காக நடனமாடி வாக்குச் சேகரித்த மகள் அக்ஷரா!

Published on 04/04/2021 | Edited on 04/04/2021

 

makkal needhi maiam party president kamal haasan daughter akshara haasan

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கான அவகாசம் இன்று (04/04/2021) இரவு 07.00 மணியுடன் முடிவடைவதால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரம்!

 

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் முதன்முறையாகக் களம் காண்கிறார். அதேபோல், பா.ஜ.க.வின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனும் போட்டியிடுவதால் இந்த தொகுதி நட்சத்திர தொகுதியானது. அதேபோல் காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுவதால் கோவை தெற்கில் மும்முனை போட்டி நிலவுகிறது.

 

உக்கடம், காந்திபுரம், டவுன்ஹால் என மாநகரின் முக்கிய பகுதிகளை உள்ளடக்கியத் தொகுதி கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி. இந்த தொகுதியில் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், வெளி மாநிலத்தவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் வாழக்கூடிய தொகுதி. இந்த தொகுதியில் சிறுபான்மையினரின் வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

 

இதனால் சிறுபான்மையினரின் வாக்குகளை ஈர்க்கும் வகையில் அமைப்பு ரீதியான சந்திப்பில் கமல்ஹாசன் ஈடுபட்டு வருகிறார். அதேபோல், பெண்கள், இளைஞர்களின் வாக்குகளைப் பெறுவதற்கான உத்திகளையும் கமல்ஹாசன் பயன்படுத்தி வருகிறார். இறுதிக் கட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ள கமல்ஹாசன் பொதுமக்களிடம் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். மற்றொரு புறம் தனது தந்தைக்கு ஆதரவாக கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து வாக்குச் சேகரித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து, இன்று அக்ஷரா ஹாசன், சுஹாசினி மணிரத்னம் ஆகிய இருவரும் இணைந்து வாக்குச் சேகரித்தனர். அப்போது, இசையோடு வரவேற்ற மக்களை அக்ஷரா, சுஹாசினி நடனமாடி உற்சாகப்படுத்தினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

அதேபோல், வானதி சீனிவானும் தனது தொகுதிக்கு உட்பட்ட மக்களைச் சந்தித்து இறுதிக் கட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். வேட்பாளர்களின் இறுதிக்கட்டத் தேர்தல் பிரச்சாரத்தால், அந்த தொகுதி களைகட்டியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'விக்கிரவாண்டி இடைத்தேர்தல்'-வீடியோவில் ஆதரவு கேட்ட மு.க.ஸ்டாலின்

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
'Vikravandi by-election' - M.K.Stalin asked for support in the video

திமுக எம்எல்ஏவின் மறைவை அடுத்து விக்கிரவாண்டியில் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் இறங்கியுள்ளன. திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், பாமக சார்பில் அக்கட்சி நிர்வாகியான அன்புமணியும், நாம் தமிழர் சார்பில் அபிநயா பொன்னிவளவன் என்ற பெண் வேட்பாளரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவு கேட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ வாயிலாக பிரச்சாரம் செய்துள்ளார். அந்த வீடியோவில் வரும்,  ''விக்கிரவாண்டி மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். ஜூலை 10-ஆம் நாள் நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆற்றல் மிக்க வேட்பாளர் அன்னியூர் சிவா என்கின்ற சிவ சண்முகத்திற்கு உங்கள் உள்ளம் கவர்ந்த உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்தியா கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுகின்ற அன்னியூர் சிவா என்கின்ற சிவசண்முகத்தை உங்களுக்கு தனியாக அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மண்ணின் மைந்தர்.  மக்களோடு மக்களாக மக்கள் பணியாற்றும் மக்கள் தொண்டர் தான் அன்னியூர் சிவா. 1986 ஆம் ஆண்டு முதல் அன்னியூர் சிவாவை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தடம் மாறாத, நிறம் மாறாத கலைஞரோட உடன்பிறப்புகளில் அவரும் ஒருத்தர். கலைஞருடைய பாணியில் சொல்ல வேண்டும் என்றால் தன்னால் கழகத்துக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே சிந்திக்கின்ற ரத்த நாளங்களில் ஒருத்தர்''  என தெரிவித்துள்ளார்.z

Next Story

பக்ரீத் பண்டிகை; தலைவர்கள் வாழ்த்து!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Bakrit festival Greetings leaders

பக்ரீத் பண்டிகை இன்று(17.06.2024) கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை, அமமுக பொதுச் செயலளார் டி.டி.வி. தினகரன் எனப் பலரும் பக்ரீத் பண்டிகை திருநாளுக்கான வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.

மேலும் பக்ரீத் பண்டிகையை ஒட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களின் சிறப்புத் தொழுகை நடத்தி வழிபட்டனர். இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பக்ரீத் கொண்டாடும் சகோதரர்களுக்கு என் அன்பான வாழ்த்துகள். உங்கள் உள்ளம் மகிழ்வால் நிரம்புவதாக; உங்கள் இதயம் நேசத்தால் நிரம்புவதாக; உங்கள் சிந்தை ஞானத்தால் நிரம்புவதாக. தியாகத் திருநாள் சிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Bakrit festival Greetings leaders

அதே சமயம் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், “அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை ஆகிய நற்குணங்களை எடுத்துரைக்கும் வகையில் உலகெங்கும் உள்ள இசுலாமிய சகோதர சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை, தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.