மணப்பாறை அருகே பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றார் அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தமிழ்நாட்டில் பாஜக தலைவர்கள் என்ன பேசுகிறார்கள்? திராவிட கட்சிகளை தமிழகத்தில் வளரவிட மாட்டோம் என்று தமிழிசை சௌந்தரராஜன் சொல்கிறார். அதற்கு நான் பதில் சொல்லியாக வேண்டுமல்லவா? திராவிடக் கட்சிகளை வளரவிட மாட்டோம் என்றால், தேசிய கட்சி என்று சொல்லிக்கொண்டிருக்கும் இவர்களை எப்படி நாங்கள் வர விடுவோம். அதனால் நான் கேட்கிறேன் அவர்களை சுமந்து கொண்டு செல்லணுமா என்று. எங்களுக்கும் உரிமை இருக்கிறது. தன்மானம் இருக்கிறது. ஆகவே எங்கள் இயக்கத்தை யார் மதிக்கிறார்களோ, தமிழ்நாட்டிற்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களோடு கூட்டணி அமைப்போம் என்றார்.