Skip to main content

ரஜினி மன்றத்தின் மாநிலச் செயலாளரானார் லைக்கா செயல் அதிகாரி ராஜு மகாலிங்கம்!

Published on 15/02/2018 | Edited on 15/02/2018

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்த தமது அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து, கட்சியை வலுப்படுத்துவதற்கான பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் மாவட்ட வாரியாக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

RAju

 

இந்நிலையில், ரஜினி மன்றத்தில் சேர்வதற்காக மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான லைக்காவில் செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த ராஜு மகாலிங்கம் அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். ரஜினியின் தீவிர ரசிகரான இவர், ஒரு நிறுவனத்தின் மிக மூத்த பதவியை விட்டுவிட்டு ரஜினி மன்றத்தில் சேர்ந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதேசமயம், அவருக்கு கட்சியில் உயர்பதவி கிடைக்கும் வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

 

ரஜினி மன்றத்தின் சார்பாக மாவட்டம் தோறும் உள்ள ரசிகர்களை சந்தித்து, ஒருங்கிணைப்பு வேலைகளில் ஈடுபட்டு வந்தார் ராஜு மகாலிங்கம். இந்நிலையில், ராஜு மகாலிங்கம் ரஜினி மன்றத்தின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சார்ந்த செய்திகள்

Next Story

லால் சலாம் வைப்.. அனைத்து மதத்தவர்களுக்கும் இஸ்லாமிய தொப்பி அணிந்து சிறப்பு தொழுகை

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
For the success of the movie Lal Salaam, people of all faiths offer special prayers

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் பிப்ரவரி 9 ஆம் தேதி(இன்று) உலகமெங்கும் வெளியாகியுள்ளது. ஒரே கிராமத்தை சேர்ந்த இந்து - இஸ்லாமிய சமூக இளைஞர்களுக்கு இடையே கிரிக்கெட் விளையாடும்போது சண்டை உருவாகி மதமோதலாக உருவாகும் சூழ்நிலை. இதனைச் சரிசெய்ய வருகிறார் ரஜினிகாந்த். சரி செய்தாரா இல்லையா என்பதே கதை. 

இப்படத்தின் கதை திருவண்ணாமலை அருகே ஒரு கிராமத்தை மையப்படுத்தி எழுதப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஆவூர் கிராமம் உட்பட திருவண்ணாமலை நகரத்தில் நடைபெற்றது. படத்தை வரவேற்கும் விதமாகவும், படம் வெற்றி அடையவும் வேலூரில் உள்ள அலங்கார் திரையரங்கத்தில் வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த ரஜினிகாந்த் நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் சோளிங்கர் ரவி தலைமையில் இந்து கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் அனைவரும் இஸ்லாமிய தொப்பி அணிந்து தொழுகை நடத்தினர்.

For the success of the movie Lal Salaam, people of all faiths offer special prayers

பட்டாசுகள் வெடித்து, மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மேளதாளத்துடன் நடத்தி ரசிகர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். மேலும், நிகழ்ச்சியின் இறுதியாக தேங்காய், எலுமிச்சை மற்றும் பூசணி உள்ளிட்டவைகளில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழித்தனர்.

Next Story

“வரலாற்றிலேயே மறக்கமுடியாத நாள்” - அயோத்திக்கு செல்வது குறித்து ரஜினிகாந்த்

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
The most memorable day in history Rajinikanth on going to Ayodhya

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நாளை (22.01.2024) பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது.

அதே சமயம் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம், உத்தரப்பிரதேசத்திற்கு புறப்பட்டார். அதேபோல், நடிகர் தனுஷும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க உத்தரப்பிரதேசம் புறப்பட்டுள்ளார். இருவரும் ஒரே விமானத்தில் பயணிப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. ராமர் கோயில் அறக்கட்டளையின் அழைப்பை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் இன்று உத்தரப் பிரதேசத்திற்கு புறப்பட்டுள்ளார். முன்னதாக அவர் விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், ‘அழைப்பின் பேரில் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க செல்கிறீர்கள் எப்படி உணர்கிறீர்கள்’ என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், “மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று பதில் அளித்துவிட்டு சென்றார்.

அதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அயோத்திக்கு செல்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. சுமார் 500 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பிரச்சனைக்கு உச்சநீதிமன்றம் முலம் ஒரு தீர்வு கிடைத்துள்ளது. இந்த நாள் வரலாற்றிலேயே மறக்க முடியாத முக்கியமான நாள்” எனத் தெரிவித்தார்.