Skip to main content

பாஜகவை எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தம்பிதுரை 

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

 

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பிதுரை. வாரணாசியில் இன்று நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்தபோது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வந்திருந்தனர். அந்த வகையில் அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி.வேலுமணி, தம்பிதுரை ஆகியோர் வாரணாசி சென்றிருந்தனர். இவர்கள் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

 

M. Thambi Durai - narandra modi - ops



அப்போது தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜகவின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது. எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள். அந்த அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது என்றார்.
 

தேர்தலுக்கு பிறகும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடருமா என்றதற்கு, இந்தக் கூட்டணி தொடரும் என்று முதல் அமைச்சர் சொல்லியிருக்கிறார் என்றார். 
 

காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்று நினைக்கிறீர்கள் என்றதற்கு, அவர்களுக்கு பழைய உறுப்பினர்கள் எண்ணிக்கை வந்தாலே பெரிய விசயம்தான். பாஜக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள்தான் வெற்றி பெறும். பாஜக அரசுக்கு மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள் என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.