Legislative session; Ops in the seat of the Deputy Leader of the Opposition

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பேச்சுவார்த்தைகள் முரண்பாடுகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என அதிமுக பிரிந்து கிடக்கிறது.எடப்பாடி பழனிசாமி தரப்பில் எதிர்கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டு ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் சட்டப்பேரவை அலுவல் கூட்டத்தில் எதிர்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அனுமதிக்க வேண்டும் என எடப்பாடி தரப்பு சட்டப்பேரவை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதேபோல் ஓபிஎஸ் தரப்பும் கடிதம் எழுதி இருக்கிறது.

Advertisment

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று துவங்க உள்ள நிலையில் சட்டப்பேரவையில் எதிர்கட்சி துணைத்தலைவர் எம்.எல்.ஏக்களின் இருக்கைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனத் தகவல் வெளியானது.

Advertisment

இதனையடுத்து காலையில் சரியாக 10 மணிக்கு கூடிய சட்டமன்றத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் மறைவு குறித்து இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. மேலும் முலாயம் சிங் யாதவ் உட்பட 7 தலைவர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

சட்டமன்றம் கூடுவதற்கு சில நிமிடங்கள் முன் வந்த ஓ.பன்னீர் செல்வம் சபாநாயகரை சந்தித்து பேசினார். இதன் பின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் அமர்ந்தார்.

இதனையடுத்து சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் நாள் அலுவல்கள் நிறைவு பெற்றது. இதனைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நாளை காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை ஒத்தி வைத்தார்.