Skip to main content

காவிரி பிரச்சன்னைக்கு நாளை இறுதி தீர்ப்பு

Published on 15/02/2018 | Edited on 15/02/2018

 

kaveri


காவிரி சம்பந்தமான அனைத்து வழக்குகளுக்கும்  நாளை தீர்ப்பு என தகவல். நாளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.காவிரி வழக்கில் இறுதி தீர்ப்பு 2007 ஆம் ஆண்டு நடுவர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் காவிரி நீர் ஆண்டுதோறும் தமிழகத்திற்கு192 டி.எம்.சி ,கர்நாடகாவிற்கு 270 டி.எம்.சி, கேரளாவிற்கு 30 டி.எம்.சி ,பாண்டிச்சேரிக்கு 7 டி.எம்.சி என பிரித்து வழங்கப்பட்டது. ஆனால் நடுவர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழகம் உட்பட 4 மாநிலங்கள் மேல் முறையீடு செய்தன . நாளை தீர்ப்பு என்ற அறிவிப்பு கர்நாடக,தமிழக எல்லைகளில் பரபரப்பான சூழ்நிலை  நிலவ  வாய்ப்புள்ளது.  தமிழகம் மற்றும் கர்நாடகத்திற்கு இடையேயான காவிரி பிரச்சன்னைக்கான தீர்வு நாளை கிட்டிவிடும்.

சார்ந்த செய்திகள்