Skip to main content

கலைஞரின் பிறந்த நாள்! ஆறாயிரம் பேருக்கு கனிமொழி உதவி! 

Published on 02/06/2020 | Edited on 02/06/2020
kalaignar



திமுகவின் முன்னாள் தலைவர் முத்தமிழறிஞர் மறைந்த கலைஞரின் பிறந்த நாளான  ஜூன் 3-ந் தேதியை தமிழகம் முழுவதும் விமர்சியாக கொண்டாடுவார்கள் திமுக உடன்பிறப்புகள். இந்த வருடம், கரோனா பாதிப்பில் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதால் அவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது திமுக.


குறிப்பாக, திமுகவின் மகளிர் அணி செயலாளர் கனிமொழி, தமிழகம் முழுவதுமுள்ள மகளிர் அணி நிர்வாகிகளிடம் கானொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது கலைஞரின் பிறந்த நாளை விமர்சியாக கொண்டாட வேண்டும், கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு உதவும் வகையில் அந்த நிகழ்ச்சி இருக்க வேண்டும், எந்த சூழலிலும் ஆடம்பரம் கூடாது என அறிவுறுத்தியிருந்தார். இதனை மனதில் ஏற்றுக்கொண்டு தமிழகம் முழுவதும் கலைஞரின் பிறந்தநாளை மக்களுக்கு நல உதவிகள் வழங்கி விமர்சையாக கொண்டாடும் வகையில் ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள் மகளிர் அணியினர்.


அதேபோல, தனது நாடாளுமன்ற தொகுதியான தூத்துக்குடி மாவட்டத்தில் அடங்கியுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 1000 குடும்பத்தினருக்கு 1 மாதத்திற்கு தேவையான உணவு பொருட்களை கலைஞரின் பிறந்த நாளில் வழங்குகிறார் கனிமொழி.  முழுக்க, முழுக்க தனது சொந்த பணத்திலிருந்து செலவு செய்து கலைஞரின் பிறந்தநாளை வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழைகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியாக கொண்டாடுகிறார். இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளன. 
                    
ஒவ்வொரு தொகுதிகளிலும் தேர்வு செய்யப்படும் 1000 பயனாளிகளும் வாழ்வாதாரம் இழந்த பொது மக்களாக இருக்க வேண்டும். திமுகவினர் யாரும் இந்த பட்டியலில் வந்துவிடக்கூடாது என பயனாளிகளை தேர்வு செய்தவர்களிடம் ஸ்ட்ரிக்டாக சொல்லியுள்ளார் கனிமொழி.

 

 

 

சார்ந்த செய்திகள்