ஆந்திராவில் முதலமைச்சராக பதவிக்கு வந்த நாளில் இருந்து இன்று வரை பல அதிரடி திட்டங்களை அறிவித்து மக்களை கவர்ந்து வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி. கடந்த வாரத்தில் ஆந்திராவில் ஆந்திரா மக்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதனையடுத்து கிறுஸ்துவர்களின் புனித ஸ்தலமான ஜெருசலேமுக்கு ஜெகன் சென்றுள்ளார். அதாவது, ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையும் முன்னாள் முதல்வருமான ராஜசேகர ரெட்டி குடும்பத்தோடு கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார். அதனைத்தொடர்ந்து ஆண்டுதோறும் ஜெருசலேம் செல்வதை ஜெகன் குடும்பத்தினர் வழக்கமாக வைத்துள்ளனர்.

Advertisment

jegan

மேலும் தனது சொந்த விஷயமாக பயணம் மேற்கொள்ளவுள்ளதால் அரசு செலவை எற்க மறுத்தாதாக கூறப்பட்ட நிலையில் புது சர்ச்சையில் ஜெகன் சிக்கியுள்ளார். அதாவது சொந்த செலவில் செல்வதாக அறிவித்த நிலையில் தற்போது ஜெகன் மோகனின் ஜெருசலம் பயணத்துக்கு ரூ.22 லட்சத்தை ஆந்திர அரசு ஒதுக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது அவரது பாதுகாப்பு காரணங்களுக்காக ஒதுக்கப்பட்டது என்று ஆந்திர அரசாங்கம் தெரிவிக்கின்றது. இதனால் எதிர்கட்சிகள் ஜெகன் மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.