Skip to main content

“மூணு நாள் ஆச்சு இன்னும் பில் வரல; முடிஞ்சா இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள...” -அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி 

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

 'It's been three days and still the bill has not arrived; will it be done by today evening' - Minister Senthil Balaji interviewed

 

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர்கள் அண்ணாமலை குறித்து கேள்விகள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''பல்வேறு குற்றச்சாட்டுகளை வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற நோக்கத்தில் வாய்க்கு வந்த கருத்துக்களை, குற்றச்சாட்டுகளை, அவதூறுகளைப் பரப்புகின்ற நோக்கத்தில் நீங்கள் சொல்லக்கூடிய நபரின் (அண்ணாமலை) செயல்பாடுகள் இருக்கின்றது. என்னுடைய சொத்துப் பட்டியலை பேரணி போகும்போது வெளியிடுவேன் என்று சொல்கிறார். ஏற்கனவே அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பொழுது அந்த நபருடைய சொத்துப் பட்டியலும் அதில் இணைக்கப்பட்டுள்ளது. ஒன்றரை வருடத்திற்கு முன்பு நடந்த தேர்தலின்போது இணைக்கப்பட்ட சொத்துப் பட்டியல் இருக்கிறது. நான் அதிகாரியாக பணிபுரியும்போது எவ்வளவு சம்பளம் வாங்கினேன், என்ன வருமானம் வந்தது என்பதெல்லாம் அதில் இருக்கும். எவ்வளவு அசையும் சொத்து; எவ்வளவு அசையாத சொத்து எல்லா விவரங்களும் அதில் இருக்கும் என்கிறார். அதை ஏன் மீண்டும் வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

 

நான் சிம்பிளாக ஒரே ஒரு கேள்வி கேட்டேன் வாங்கின கடிகாரத்திற்கு பில் இருக்கா இல்லையா என்று. நீங்கள் தேர்தலுக்கு முன்னால் அந்த கடிகாரத்தை வாங்கி இருந்தால் கணக்கில் காட்டியிருக்க வேண்டும். தேர்தலுக்குப் பின்னாடி வாங்கி இருந்தால் ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்தேன் பில்லை வெளியிடுங்கள் என்று. ஒரு மணி நேரம் முடிந்து ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள் ஆகிவிட்டது. 'மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை' உங்களுடைய மடியில் கனம் இருக்கு. எனவே வழியில் பயந்துதான் போக வேண்டும். தூய்மையான அரசியல்வாதியாக இருந்தால், பில் இருந்தால் கொடுத்துவிட்டுப் போக வேண்டியதுதானே. இந்த டைமில் வாங்கினேன்; இந்தக் கடையில் வாங்கினேன்; இந்த விலைக்கு வாங்கினேன் என்று சொல்லலாமே. அதை ஏன் மறைக்க வேண்டும். ஏன் பேரணி போகும்போது வெளியிடுவேன் என்று சொல்லணும். முடிஞ்சா இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள அந்த நபர் அந்த கடிகாரத்திற்கான ரசீதை வெளியிட வேண்டும். எந்தக் கடையில வாங்குனது; என்ன விலைக்கு வாங்கனது என்று நிரூபிக்க வேண்டும்.

 

ஒன்று பணம் கொடுத்து வாங்கி இருந்தால் அக்கவுண்டில் இருந்து அன்னைக்கு பணம் எடுத்திருக்க வேண்டும் அல்லது அக்கவுண்டில் இருந்து பணம் கொடுத்திருந்தால் அதற்கான எவிடன்ஸை நீங்கள் வெளியிட வேண்டும். யாரோ கொடுத்தது; யாருகிட்டையோ வெகுமதியாக வாங்கினது. அதனால் வெளியிட முடியவில்லை. பில் தயாராகிக் கொண்டிருக்கிறது. சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என்று சொல்லும் அந்த நபர், பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு இதற்கும் சேர்த்து நான் கையெழுத்து வாங்குவேன் என்று ஒரு நடைப்பயணம் போலமே. 410 ரூபாய்க்கு விற்ற சிலிண்டர் இன்னைக்கு 1,100 ரூபாயை கடந்து போய்க் கொண்டிருக்கிறது. அதற்கும் சேர்த்து கையெழுத்து வாங்கலாம் அல்லவா. மக்கள் அதிலும் பாதிக்கப்படுகிறார்கள். சிலிண்டர் மானியம் அக்கவுண்டில் வரும் என்றார்கள், யாராவது ஒருவர் வாங்கி இருக்கிறீர்களா’' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைபிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.