இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் நலதிட்ட உதவி வழங்கும் விழா சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள மஹா மகாலில் நேற்று நடைபெற்றது.

Advertisment

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற முன்னாள் தலைவர் டி.யசோதா மற்றும் சுசிலா கோபாலகிருஷ்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி கலந்துகொண்டு மக்களுக்கு உதவி பொருட்களை வழங்கினார்.

Advertisment

இதில் சில்வர் குடம், புடவைகள், அயன் பெட்டி போன்ற பொருட்கள் வழங்கப்பட்டன. அந்தப் பொருட்களை வாங்க கரோனா பயமில்லாமலும் தனிமனித இடைவெளி இல்லாமலும் மக்கள் கூட்டமாக இருந்தனர்.இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட கட்சியின் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.