Skip to main content

“முதல்வர் மு.க. ஸ்டாலினை இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கிறது” - தேஜஸ்வி யாதவ்

Published on 01/03/2023 | Edited on 01/03/2023

 

"India is waiting for M.K.Stalin" - Tejashwi Yadav

 

முதல்வர் மு.க.ஸ்டாலினை இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கிறது என பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை நந்தனம் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு தேசிய அளவில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னை வந்துள்ளனர்.

 

இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், “இன்று சிறப்பான நாள். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இன்று பிறந்த நாள். அதேபோல் பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் இன்று தான் பிறந்த நாள். என் தந்தை லாலு பிரசாத் யாதவும் அவரது வாழ்த்துகளை தெரிவிக்க சொன்னார். கடுமையான உழைப்பினால் ஆட்சியை பிடித்தவர். சமூக நீதிகளின் மேன்மைகளை பாதுகாக்கும் வகையில் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியை நடத்தி வருகிறார்.

 

சோசலிஷம் மற்றும் சமூகநீதி கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் சந்திக்கும் தளமாக தமிழ்நாடு மாறிவிட்டது. சமூகநீதியில் உறுதியுடன் இருந்தால் மட்டுமே வலுவான தலைமை உருவாகும். தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் கொள்கைகளை தேசிய அளவில் எதிர்க்கட்சிகளாக உள்ள கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும். நாட்டின் ஜனநாயகமே அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை அமலில் உள்ளது. வலுவான ஒரு மாற்று சக்தியை உருவாக்குவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கிறது.” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“மோடி ஆட்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் தேர்தலில் அல்வா கொடுப்பார்கள்” - டி.ஆர். பாலு எம்.பி.

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
people of TN will definitely give Alwa to the Modi regime in the elections D R Balu MP

இரண்டு நாள் சுற்றுப் பயணமாகத் தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடி நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனையடுத்து இரண்டாவது நாளாக இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அந்த வகையில் பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வணக்கம் எனக் கூறி பேசுகையில், “தமிழ் மொழி மிகவும் பழமையானது. பல்வேறு சிறப்புகளை கொண்டது. தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தை அலங்கரிக்கிறது. கடந்த 1991இல் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு இடையில் காஷ்மீரில் தேசியக்கொடியை ஏற்றினோம். நல்லாட்சியை நடத்தி தமிழகத்திற்கு கல்வி, சுகாதாரத்தை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வரவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாதான் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை கொடுத்தார். ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக பணியாற்றினார். என் மீது அன்பு கொண்டவர்கள் தமிழக மக்கள். பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்பதை இங்கு கூடியுள்ள மக்கள் மூலம் தெரிகிறது. 2024 தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும். ஒவ்வொரு பாஜக தொண்டரும் தேசமே பிரதானம் என கருதி உழைக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். மேலும் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

people of TN will definitely give Alwa to the Modi regime in the elections D R Balu MP

இந்நிலையில், திமுக பொருளாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர். பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக ஆட்சியைக் கவிழ்த்தவர் ஜெயலலிதா. ஊழல் வழக்கில் தண்டனை பெற்று 2 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டவர் ஜெயலலிதா. 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் ஜெயலலிதா. அப்படிப்பட்ட ஜெயலலிதா தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியைக் கொடுத்ததாகப் பிரதமர் மோடி பேசியிருப்பதைப் பார்த்துத் தமிழ்நாட்டு மக்கள் சிரிக்கிறார்கள். ஜெயலலிதாவை வைத்து தமிழ்நாட்டில் ஓட்டு வாங்க பிரதமர் மோடி நினைக்கிறார்.

திமுக அழிந்து போகும். தலை தூக்காது என திமுக உருவான 1949 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 74 ஆண்டு காலமாகப் பலர் பேசிக் கடந்து சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், தி.மு.க என்ற இமயமலை இன்றும் வரலாற்றில் நிமிர்ந்து நின்றுகொண்டு தான் இருக்கிறது. தி.மு.க.வையே இல்லாமல் ஆக்கிவிடுவாராம். சவால் விட்டுள்ளார். இப்படிச் சொன்னவர்கள் எல்லாம் வரலாற்றில் காணாமல் போய்விட்டார்கள். அந்த வரிசையில் அவரும் விரைவில் இணைந்துவிடத்தான் போகிறார் என்று எச்சரிக்கிறேன். பேரிடர் நிதியைக் கூட தராமல் அல்வா கொடுக்கும் மோடி ஆட்சிக்கு இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் அல்வா கொடுப்பார்கள். பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்குக் கொடுத்தது என்ன? சில திருக்குறள்களும் பாரதியார் கவிதைகளும் மட்டும்தானே” எனக்  குறிப்பிட்டுள்ளார்.

Next Story

‘எம்.பி.யை காணவில்லை’ - வேலூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
There is a stir due to the poster pasted in Vellore saying that  MP is missing

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பியாக இருக்கக்கூடியவர் திமுகவைச் சேர்ந்த கதிர் ஆனந்த். இவர் 2019 தேர்தலில் வெற்றிபெற்று வேலூர் எம்.பியானார். கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தி தொகுதி மக்களிடையே இருந்து வந்ததாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், வேலூர் மாநகர் முழுவதும் முக்கிய இடங்களில், சாலை ஓரச் சுவர்களில், பொது இடங்களில் ‘எங்க தொகுதி எம்.பி. எங்கேயும் காணவில்லை. கண்டா வரச் சொல்லுங்க. இங்ஙனம் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி மக்கள்’ என்று போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தி.மு.கவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியிலும் 38 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் எம்பிக்களாக உள்ளனர். இன்னும் இரண்டு மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுமக்களின் பெயரில் இப்படி ஒரு போஸ்டரை அனைத்து தொகுதிகளிலும் ஒட்டி தேர்தல் பணி தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.