Skip to main content

விருதாச்சலத்தில் ஒன்றிய குழு தலைவர் பதவி! சுயேச்சையாக போட்டியிட்டவர் வெற்றி! 

Published on 26/05/2022 | Edited on 26/05/2022

 

Independent competitor wins! Union Committee Chairman post at Vriddhachalam!

 

விருத்தாச்சலத்தில் புதிய ஒன்றிய சேர்மனுக்காக நடைபெற்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வென்ற பின் திமுகவில் சேர்ந்த கவுன்சிலர் 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

 

கடந்த 2019 ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 19 வார்டுகளில் அ.தி.மு.க 5, தி.மு.க 4, பா.ம.க 4, சுயேச்சை 4, பா.ஜ.க 1, தே.மு.தி.க 1 என வெற்றி பெற்றதில் அ.தி.மு.கவை சேர்ந்த செல்லத்துரை ஒன்றியக்குழு தலைவராகவும், பா.ம.கவை சேர்ந்த பூங்கோதை துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

 

இதில் கடந்த ஆண்டு கரோனாவால் மு.பரூர் அ.தி.மு.க கவுன்சிலர் மல்லிகாவும், அவரது கணவர் பாலதண்டாயுதமும் உயிரிழந்தனர். அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.கவை சேர்ந்த மதியழகன் வெற்றி பெற்றார். அதையடுத்து தி.மு.க கவுன்சிலர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. அ.தி.மு.க கவுன்சிலர்களின் எண்ணிக்கை 4 ஆக குறைந்தது. இதனால் அ.தி.மு.க சேர்மன் செல்லத்துரை பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அ.தி.மு.கவை சேர்ந்த செல்லத்துரை மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் தனம் சிவலிங்கம் ஆகியோர் தி.மு.கவில் இணைந்தனர். அதையடுத்து அ.தி.மு.க ஒன்றிய குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 ஆக குறைந்தது. 

 

Independent competitor wins! Union Committee Chairman post at Vriddhachalam!
செல்லத்துரை

 

இந்நிலையில்  கடந்த 21.12.2021 அன்று தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க, தே.மு.தி.க மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் 15 பேர் மக்களின் நலனுக்கு எதிராகவும், தமிழக அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் பாரபட்சம் காட்டுவதாகவும், பஞ்சாயத்து சட்டங்களுக்கு விரோதமாக நடந்து வருவதாகவும், ஒன்றியக் குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் நம்பிக்கையை ஒன்றியக்குழு தலைவர் இழந்து விட்டதால் செல்லத்துரைக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் மனுவினை விருத்தாச்சலம் கோட்டாட்சியர் ராம்குமாரிடம் அளித்தனர்.  அதனடிப்படையில் கடந்த 05.03.2022 அன்று விருத்தாசலம் ஊராட்சி  ஒன்றிய அலுவலகத்தில் நம்பிக்கை இல்லா தீர்மான மனு மீது ரகசிய ஓட்டெடுப்பு நடைபெற்றது. கோட்டாட்சியர் ராம்குமார் தலைமையில் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் 19 உறுப்பினர்களில் சேர்மன் செல்லத்துரைக்கு எதிராக 16 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வாக்களித்ததால் ஒன்றிய சேர்மன் செல்லதுரை பதவி இழந்தார். 

 

இந்நிலையில் புதிய ஒன்றியக்குழு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் உதவி திட்ட அலுவலர்  ரவிச்சந்திரன் தலைமையில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் நேற்று நடைபெற்றது.

 

Independent competitor wins! Union Committee Chairman post at Vriddhachalam!

 

இத்தேர்தலில் விருத்தாச்சலம் ஒன்றியத்துக்குட்பட்ட அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க, சுயேச்சைகள், தி.மு.க உள்ளிட்ட 19 ஒன்றிய கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். இத்தேர்தலில் தி.மு.கவை சேர்ந்த செல்லத்துரையை எதிர்த்து, தேர்தல் நேரத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற பின் திமுகவில் இணைந்த வேட்பாளரான மலர் என்பவரும் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இதில் மலர் 16 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றதால், விருத்தாச்சலம் ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் செல்லதுரைக்கு 3 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

 

ஆட்சி மாறியதும் ஒன்றிய குழு தலைவர் பதவியை தக்க வைப்பதற்காக அ.தி.மு.கவிலிருந்து தி.மு.கவுக்கு தாவிய செல்லத்துரையை எதிர்த்து, சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு பின்னர் தி.மு.கவில் சேர்ந்த மலர் வெற்றி பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.