Skip to main content

இத்தனையும் நடந்தால் பொதுச் செயலாளர் போட்டிக்கு தயார்; பன்னீர்செல்வம் ஓப்பன் டாக்!

Published on 26/03/2023 | Edited on 26/03/2023

 

If all this happens, the Secretary General is ready to compete; Panneerselvam Doc!

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவரின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம் மணமக்களை வாழ்த்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத் தேர்தலுக்குள் இருவரையும் சந்தித்து கட்சியை ஒருங்கிணைப்பேன் என சசிகலா கூறியுள்ளார். அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் கழகம் முழுமையாக வெற்றி பெறும் என ஆரம்பத்தில் இருந்து நாங்கள் சொல்லி வருகிறோம். சாதாரண தொண்டன் கூட கழக விதிப்படி கழகத்தின் உச்சபட்ச பதவிக்கு போட்டியிடலாம். ஆனால், அவர்கள் விதிகளை மாற்றி 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும் என்றும் 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என்றும் கூறி அவர்கள் தான் சட்டத்தை திருத்தியுள்ளார்கள். அதைத்தான் கூடாது என்கிறோம். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கழகத்தின் சட்ட விதிப்படி கழகத்தை வழிநடத்தி மகத்தான வெற்றிகளை ஈட்டி தமிழகத்திலே ஆளும் உரிமையை பெற்ற கட்சி அதிமுக எனும் நிலையை உருவாக்கியுள்ளார்கள். அதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம். 

 

தொண்டர்கள் தேர்ந்தெடுத்தால் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவீர்களா என கேட்கிறார்கள். இது குறித்து ஏற்கனவே சொல்லிவிட்டேன். கழகத்தின் சட்ட விதிகளின் படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கும், ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்களது அட்டையை புதுப்பித்துக் கொள்வதற்கும் கழகத்தின் சட்டவிதி இருக்கிறது. அந்த விதிகளின் படி, இருக்கின்ற கிளைக் கழகங்கள் அத்தனைக்கும் புதிதாக உறுப்பினர் படிவங்கள் கொடுக்கப்பட வேண்டும். படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு அவை தலைமைக் கழகத்தில் கொடுக்கப்பட்ட பிறகு கழகத்தின் சட்ட விதிப்படி அவர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து கழகத்தின் அமைப்பு ரீதியிலான தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஜனநாயக முறைப்படி அனைவரும் வாக்களித்து இத்தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அப்படிச் செய்தால் உறுதியாக அனைத்து கீழ் நிலையில் இருக்கும் தொண்டர்கள் முதற்கொண்டு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற சூழ்நிலை உருவாகும். அந்த சூழ்நிலைதான் எம்ஜிஆர் காலத்தில் இருந்து ஜெயலலிதா காலம் வரை இருந்தது. அதை மாற்றியுள்ளார்கள். மாற்றக்கூடாது என சொல்லியுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்’ - இ.பி.எஸ். வலியுறுத்தல்! 

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
 Cm should resign EPS Emphasis

சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் கூட்டம் நேற்று (21.06.2024) காலை 10 மணிக்குத் தொடங்கியது. அப்போது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் குறித்து விவாதிக்க அதிமுக உட்பட எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும் சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். அதோடு அவை நடவடிக்கைகள் பாதிக்கும் வகையில் அதிமுக உறுப்பினர்கள் செயல்பட்டதால் நேற்று ஒருநாள் சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்க பேரவைத் தலைவர் தடைவிதித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசுகையில், “மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில், வெளியேற்றப்பட்டவர்கள் இந்த அவைக்கு வினாக்கள் விடைகள் நேரம் முடிந்த பின்னரே அனுமதிக்கப் பெறலாம் என்னும் வேண்டுகோளையும், பிரதான எதிர்க்கட்சி தன்னுடைய கருத்தினைப் பதிவு செய்ய வாய்ப்பு தர வேண்டும் என்றும், இதனைத் தாங்கள் பரிசீலித்து ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டு அமர்கிறேன்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து முதல்வரின் உரையைச் சுட்டிக்காட்டி அதிமுக உறுப்பினர்கள் அவைக்குள் வர சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்தார். இருப்பினும் அவை நிகழ்வில் பங்கேற்கவில்லை என அதிமுக அறிவித்தது. அதோடு சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இருந்து புறப்பட்டுச் சென்றார். 

 Cm should resign EPS Emphasis

இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்த விவாதம் நடத்தக்கோரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டபோது சபாநாயகர் எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார். அதன் பிறகு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் ‘ஜனநாயக மாண்பு காப்பாளர்’ என்று கூறி கள்ளச்சாராய மரணங்கள் குறித்த முற்றிலும் ஏற்கத்தகாத ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். அதிமுகவினர் சபையில் இல்லாதபோது வந்து, தான் ஓடி ஒளியவில்லை என்று திமுக முதல்வர் சொல்வது நகைப்புக்குரியது.

சென்ற ஆண்டு செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 23 பேர் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த பிறகாவது, திமுக அரசு கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஏதேனும் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று கள்ளக்குறிச்சியில் இச்சோகம் நிகழ்ந்திருக்காது. எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு முழு பொறுப்பு முதல்வர் மு.க. ஸ்டாலின் தான். இப்போது வந்து ‘நான் அதிகாரிகளை மாற்றிவிட்டேன்’ என்று சொல்வது பொறுப்பற்றத் தன்மையின் உச்சம்.

மக்கள் நலன் ஒன்றே அதிமுகவின் அரசியல் ஆதாயம். அந்த ஆதாயம் நிறைவேற நாங்கள் அனைத்து ஜனநாயக வழிகளிலும் போராடுவோம். 18.02.2017 அன்று நீங்கள் சட்டப்பேரவையில் அரங்கேற்றிய அராஜகம், தமிழ்நாடு சட்டப்பேரவை கண்டிராத ஜனநாயகப் படுகொலை. ஜனநாயக மாண்பைப் பற்றிப் பேச திமுகவிற்கு எந்த அருகதையும் இல்லை. நீங்கள் அதிகாரிகளை மாற்றவே 50 உயிர்கள் பலியாக வேண்டுமா?. இப்போது நீங்கள் வாசிக்கும் பட்டியலால் போன 50 உயிர்கள் மீண்டும் வந்துவிடுமா?. மனசாட்சி என்பது கொஞ்சமும் இருந்தால் முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்”எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீன் மனு; காரசார விவாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒத்திவைப்பு

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
mr vijayabhaskar bail plea adjourned again for the third time
எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூரில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட 100 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமின் கேட்டு, கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், 3-வது முறையாக இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகின்ற 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

கரூர் மாவட்டம், மேலக்கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல்காதர் கரூர் நகர போலீசில் கொடுத்த புகாரில், போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்த ரகு என்பவர் மீதும், இந்த விவகாரத்தில் தன்னை மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த 22 ஏக்கர் நிலம் சுமார் ரூ.100 கோடி மதிப்புடையது. இந்தப் புகாரின் மீது கரூர் நகர போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையைத் தொடங்கினர். 

mr vijayabhaskar bail plea adjourned again for the third time
பிரகாஷ்

இதேபோல், கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். கடந்த 19ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று 21-ஆம் தேதி வந்த நிலையில், கடுமையான விவாதங்களுக்கு பிறகு மூன்று தரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் வருகின்ற 25ஆம் தேதிக்கு மனு மீதான விசாரணையை மீண்டும் 3வது முறையாக ஒத்தி வைத்துள்ளார்.